கடல் அலையின் அழகைப் பாடாத கவிஞர்கள் இல்லை. கடல் அலையைப் போலதான் இந்தக் குடல் அலையும். குடல் சுருங்கி விரியும் இயக்கத்தைப் பார்த்தால், இதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள். கடல் அலைக்கு எப்படி ஓய்வே இல்லையோ... அதைப்போலதான் குடல் அலைக்கும். கடல் அலையில் சீற்றமோ, உள்வாங்கும் தன்மையோ இருந்தால் இயற்கையின் அழிவுக்கான அறிகுறி என்பார்கள். குடல் அலையின் இயக்கம் அதிகமானாலோ... இல்லை நின்றுபோனாலோ வயிறாகிய எனக்கு உபாதைகள் உண்டாகின்றன என அர்த்தம். சில நேரங்களில் மட்டும் மூளைக்கு அடிபணிந்து நான் நடக்கும்போது, குடல் அலை இயக்கம் மிக அதிகமாகி காரணம் புரியாத பேதி ஏற்படும். இதனால், குடல் இயக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலும் பேதியும் மாறிமாறித் தோன்றுகின்றன. குடலின் அமைப்பைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொன்னால்தான் உங்களுக்கு சுலபமாகப் புரியும். உணவுக் குழாயின் உள் அமைப்பை ஓர் உருண்டையான சிலிண்டர் அல்லது குழாய் போன்ற அமைப்புக்கு ஒப்பிடலாம். உணவுப் பாதையை உள்ளே நோக்கினால், அதற்குள். . .