தெரிந்த புராணம்... தெரியாத கதை!
குருக்ஷேத்திரப் போரின் இறுதிக் கட்டமான 18-ஆம் நாள். பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத யுத்தத்தில், துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, குற்றுயிராகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான். அதர்மத்தையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து, கொடுமைகளையே செய்து வந்த அவனுக்கு இப்படியரு கோர முடிவு ஏற்பட்டது. நல்ல மரணம் அவனைத் தழுவுவதில் தாமதம் நிகழ்ந்தது. குற்றுயிராக அவன் சித்ரவதைப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போதும்கூட, அவன் பூரணமாகத் தன் தவற்றை உணரவில்லை. இந்த நிலையில், யாருமின்றித் தனியனாகக் களத்தில் விடப்பட்ட துரியோதனனை, போரில் மடியாமல் இருந்த அஸ்வத்தாமன் சந்தித்தான். அஸ்வத்தாமன் கௌரவர்களின் குருவான துரோணாச்சார்யரின் மகன். பிறப்பால் அந்தணன். தந்தையைப்போல அஸ்திர சாஸ்திரத்தில் திறமை மிக்கவன். மந்திர- தந்திர சாஸ்திரங்களில் தந்தையையும் மிஞ்சியவன். பாண்டவர்களுக்குத் துரியோதனன் இழைத்த தீங்கையும் அநீதியையும் நன்கு உணர்ந்தவன்தான் அவன். ஆனாலும், செஞ்சோற்றுக்கடன் கழிக்க வேண்டி, துரியோதனனுக்கு ஆதரவாக அதர்மத்தின் பக்கம் நின்றான். தன் தந்தை துரோணரைக் கொன்ற காரணத்தால், அவன் பாண்டவர்களைப் பழிவாங்கத். . .