திருப்பட்டூர் அற்புதங்கள்!
அற்புதமானதொரு க்ஷேத்திரத்தைப் பற்றி அறிந்துகொள்ளப் பல வழிகள் உண்டு. தெரிந்தவர் அறிந்தவர் எவரேனும் அந்தத் தலத்துக்குச் சென்று வந்து, அதன் அருமைபெருமைகளை நம்மிடம் எடுத்துரைக்கலாம். 'அந்தக் கோயிலுக்குப் போயிருந்தேன்ப்பா! அந்தத் தலத்துல கால் வெச்சதுமே, மனசுல இனம் புரியாத ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தேன். கண்டிப்பா, நீயும் ஒருமுறை குடும்பத்தோடு அங்கே போயிட்டு வா!’ என்று உறவுக்காரர்களோ, நண்பர்களோ தெரிவிக்கலாம். பரவசத்தோடு அவர்கள் சொல்லும் விதமே நம் மனத்தை ஈர்க்க, 'போய்த்தான் பார்ப்போமே!’ என்று நாமும் அந்தக் கோயிலுக்குச் சென்று வந்து, மன நிறைவைப் பெறலாம். 'இந்த ஊர்ல, இப்படியரு கோயில் இருக்குன்னு புஸ்தகத்துல போட்டிருந்துது. அதான், இங்கே வந்து தரிசனம் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தோம்’ என்று சொல்பவர்களும் உள்ளனர். ஆனால், மகான்களும் ரிஷிகளும் வணங்கித் தொழுத திருப்பட்டூர் திருத்தலம் பற்றி, சென்னையைச் சேர்ந்த அந்தப் பெண்மணிக்கு எடுத்துச் சொன்னது யார் தெரியுமா? ஸ்ரீராகவேந்திர சுவாமிகள். ''ஸ்ரீராகவேந்திரர் மிகப் பெரிய மகா. . .