எங்களுக்கு ஒரே மகன். என் பாட்டி, தந்தை மற்றும் என் சகோதரர்களுடன் பூர்வீக வீட்டில், கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். பெரியவர்கள் சிலர், பூர்வீக வீட்டில் 3 தலைமுறைக்குமேல் வசிக்கக் கூடாது என்கிறார்கள். இது சரியா? - சுந்தரராஜன், திருச்சி-6 வசிக்கக்கூடாது என்பது தவறான தகவல். ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு கேரளத்தில் குடியேறிய தமிழர்கள் ஆறு தலைமுறையாக அங்கே குடியிருந்து, வாழ்ந்து வருகின்றனர். கொச்சியில் குடியேறிய குஜராத்திகளும், கொங்கிணிகளும் குடியேறிய நாளில் இருந்து அதே வீட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின் றனர். சென்னப் பட்டணத்தில் குடியேறிய தெலுங்கர்களும் அதில் அடங்குவர். 'திருமணத் தம்பதிகள், தங்களது நாலாவது தலைமுறையில் உதித்த குழந்தைக ளோடு ஆடிப்பாடி மகிழ்ந்து இந்த வீட்டில் நிலைத்து இருக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனை ரிக் வேதத்தில் உண்டு (க்ரீடந்தௌ புத்ரை: நப்த்ரிபி: ஏதமாளௌ ஸ்வே கிருஹே) வேதமே பல தலைமுறைகளாக இந்த வீட்டில் வாழ வேண்டும் என்று எண்ணும்போது, மூன்று. . .