சிக்கல் தீர்க்கும் சிங்கவரம் தீர்த்தவாரி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ளது சிங்கவரம். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் உள்ளது செஞ்சி. செஞ்சியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கவரத் துக்கு பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு! இங்கே... மலைக்கோயிலில், குடைவரைச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத பெருமாள் எழுந்தருளி, சேவை சாதிக்கிறார். ராஜா தேசிங்கு வழிபட்ட ஆலயம், மலையடிவாரத்தில் ஸ்ரீஅனுமன், புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் ஸ்ரீவிஷ்ணு துர்கை என இந்தத் தலத்தின் சிறப்புகள் ஏராளம். பள்ளி கொண்ட ஸ்ரீரங்கநாதரை, தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அப்படியரு அழகு. போருக்குச் செல்ல வேண்டாம் என்று ராஜா தேசிங்கிடம் சொல்லியும் அவர் கேட்காததால், கோபத் துடன் தெற்கு நோக்கி முகம் திருப்பிக் கொண்டு காட்சி தருகிறார் என்பது ஐதீகம்!. . .