''எனக்கு இந்தி என்றாலே பிடிக்காது. எவ்வளவோ படித்தும் மண்டையில் ஏறவில்லை. அதனால், உமா மகேஸ்வரி டீச்சர் என்னைக் கண்டிப்பார். அவர் திட்டுவார் என்பதற்காகவே நிறைய தடவை பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருக்கிறேன். ஆத்திரத்தில், கோபத்தில் தப்பு செய்துவிட்டேன். ஆனால், இப்போது தவிக்கிறேன். நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை. உமா மகேஸ்வரி டீச்சர் கதறியது என் கண்ணிலேயே நிற்கிறது. நான் தப்பு செய்துவிட்டேன். எனக்குத் தண்டனை கொடுங்கள். எனக்கு மன்னிப்பே கிடையாது!'' - உமா மகேஸ்வரி கொலையாளி ஒன்பதாம் வகுப்பு மாணவன். ஆசிரியை உமா மகேஸ்வரி தன் வகுப்பு மாணவனால் கொல்லப்பட்ட அன்று சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிக்க பூந்தமல்லி நெடுஞ்சாலை வன் முறைக் களமாகி இருந்தது. காரணம், பச்சையப்பா கல்லூரி மாணவர்கள். 'பஸ் தினம்’ கொண்டாட விதிக்கப்பட்ட தடையை. . .