நேற்று ஆஸ்துமா... நாளை ஒலிம்பிக்!
'ஸ்ப்ளாஷ்...’ என்று குளத்தில் குதிக்கும்போது நீரைக் கிழிக்கும் அனுஷா, அதற்குப் பின் நீருக்கே வலிக்காமல் குட்டி டால்பினாக நீந்துகிறார். 'இன்னொரு நீச்சல் சாம்பியன்’ என்று பட்டியலில் சேர்க்க முடியாத வீராங்கனை அனுஷா! பிறக்கும்போதே சுவாசப் பிரச்னை. ஐந்து வயது வரை உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட அனுஷா, இன்று 150 தங்கப் பதக்கங்களுக்குச் சொந்தக்காரர். சென்னை லேடி ஆண்டாள் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி யான இவர், 'ஃப்ரீ ஸ்டைல் டிஸ்டன்ஸ்’ நீச்சல் போட்டியில் தேசிய சாம்பியன். இப்போது ஒலிம்பிக் கனவோடு தண்ணீரிலேயே மிதந்துகொண்டு இருக்கிறார். ''பிறக்கும்போதே எனக்கு ஆஸ்துமா பிரச்னை. அடிக்கடி ஐ.சி.யூ. படுக்கையில்தான் இருப்பேன். நெபுலைசர், இன்ஹேலர் இல்லாமல் ஒரு நாளும் கழியாது. ஒருவழியா சமாளிச்சு 12 வயசைக் கடந்தேன். ஆனா,. . .