தாண்டவபுரம் சோலை சுந்தரபெருமாள் வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. பக்கங்கள்: 700விலை: 390 வைதீகக் கொடுமைகளான சாதி, தீண்டாமை, உயிர்ப் பலி ஆகியவற்றை மறுத்து உருவாகிய அவைதீக மதங்கள் சமணமும் பௌத்தமும். ஆனால், போகப் போக அரச மதமாக மாறிய சமணமும் பௌத்தமும் அதிகாரப் பசிக்கு இரையானது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காத இறுக்கமான கட்டுப்பாடு கள், எந்த சாதியின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தோன்றியதோ அதே சாதியினரின் ஆதிக்கத்துக்கு ஆட்பட்டது - இந்தப் பின்னணியில் தமிழகத்தில் ஏற்பட்ட பக்தி இயக்க மறுமலர்ச்சியை விளக்குகிறது இந்த நாவல். திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய இரு சைவ ஆளுமைகளைப் பிரதானமாகக் கொண்டு ஏராள உழைப்பையும் கள ஆய்வையும் கொண்டிருக்கிறது ஒவ்வொரு அத்தியாயமும். அக்காலத்திய இனிய தமிழ் உரையாடல்கள், சமய மோதல்களின் ஊடாக நடைபெறும் தத்துவ விவாதங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய முக்கியமான வரலாற்று நாவல்! அ ம் மா. . .