'மாற்றான்’ படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள். மிலிந்த் சோமன், டேனியல் பாலாஜி, 'நடுநிசி நாய்கள்’ வீராவோடு மிரட்டல் வில்லனாக வருகிறார்... சூர்யா. நானே ஹீரோ... நானே வில்லன்! பிரபலங்களின் 'முன்னாள் ஜோடி’கள் தங்களது ஃப்ளாஷ்பேக் பேட்டிகள் மூலம் கல்லா கட்டுவது உண்டு. அந்த வரிசையில் புதிய சாதனை படைத்திருக்கிறார் ஜாசன் அலெக்சாண்டர். பிரிட்னி ஸ்பியர்ஸின் கணவராக 55 மணி நேரங்களே நீடித்த ஜாசன், அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மணித்துளி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள பெருந்தொகையைப் பெற்றிருக்கிறார். 555 அடிச்சுட்டே 55 பத்திப் பேசுவாரோ! பாவனாவும் காதல் வலையில் சிக்கிவிட்டாராம். ஹீரோ... 'சி.சி.எல்’-ல் கேரள அணிக்காக விளையாடும் ராஜீவ் பிள்ளை என்று கிசுகிசுக்கிறார்கள். அதனால்தான் கேரள அணியின் நட்சத் திரத் தூதராகவே சம்மதித்தாராம் பாவனா. ஆனால், வழக்கம்போல, 'அச்சோ... அது லவ் இல்லை. சும்மா ஃப்ரெண்ட்ஷிப் தான்!’ என்கிறார் பாவனா. எவ்வளவோ பார்த்துட்டோம்... இதையும் பார்க்க மாட்டோமா? காந்தி குடும்பத்தின் அடுத்த தலைமுறை. . .