மங்கல வாழ்வு தரும் மாசி மக தரிசனம்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், புண்ணிய தீர்த்தமான மகாமகக் குளத்தையும் அங்கே நடைபெறும் மாசி மகப் பெருவிழாவையும் அறிவோம். இந்தத் தீர்த்தக் குளத்துக்கு அருகில் கீழ்க்கரையில் அமைந்துள்ள ஸ்ரீஅபிமுகேசர் ஆலயம், மிகப்பெரிய ஞானத்தையும் புண்ணியத்தையும் தந்தருளக் கூடிய திருத்தலம்! ஸ்வாமி - ஸ்ரீஅபிமுகேசர். ஸ்ரீநாரிகேளேசர் எனும் திருநாமத்தில், கிழக்கு நோக்கியபடி அருள்பாலித்தாராம், துவக்கத்தில்! கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதை, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது புண்ணிய நதிப் பெண்கள் அனைவரும், 'மக்கள் அனைவரும் தங்களது பாபங்களையெல்லாம் எங்களிடம் சேர்த்துவிட்டனர். இதனால் நாங்கள் துன்பப்படுகிறோம்’ என சிவனாரிடம் சென்று முறையிட்டனர். பிறகு அவர் சொன்னபடி, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீநாரிகேளேசரை வணங்கித் தொழுதனர். இங்குள்ள மகாமகப் புண்ணிய தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, சிவனாரைத் தரிசித்தனர். அவர்களிடம் சேர்ந்திருந்த. . .