கலைமகள் அருள் தரும் சகலகலாவல்லி மாலை!
ஒரு முறை காசி யாத்திரைக்குச் சென்ற குமரகுருபரர், பெரியோர் பலருடன் அங்கு நடந்த சமய மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த தேசத்து முகமதிய மன்னனும் மாநாட்டுக்கு வந்திருந்தான். அவன், நமது வழிபாட்டு முறைகள்... இறை நம்பிக்கைகள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பி, தென்னாட்டில் இருந்து சென்றிருந்த சமயப் பெரியோர்களிடம் பலவாறான கேள்விகளைக் கேட்டானாம். அதுவும் எப்படி? ஹிந்துஸ்தானி மொழியில் கேட்டான்! மொழி புரியாது நம்மவர்கள் திகைக்க, அங்கிருந்த குமரகுருபரர் மன்னனது கேள்விகள் அனைத்துக்கும் தாமே மறுதினம் பதில் தருவதாகச் சொல்லிவிட்டு திரும்பினார். மன்னனிடம் அவகாசம் வாங்கியாகிவிட்டது. ஆனால் மறுதினம் ஹிந்துஸ்தானி மொழி தெரிந்து பேச வேண்டுமே? கலைமகளைச் சரணடைந்தார் குமரகுருபரர். ஸ்ரீமஹாசரஸ்வதி தேவியைக் குறித்து 'சகலகலாவல்லி மாலை’ எனும் போற்றிப் பாடல்களைப் பாடி வணங்கினார். தேவி சரஸ்வதியின் பரிபூரண அருளால், மறுதினம் மன்னனின் கேள்விகள் அனைத்துக்கும் ஹிந்துஸ்தானி மொழியிலேயே பதில் அளித்தார். இதனால் மிகவும் மகிழ்ந்த அந்த மன்னன், வேண்டியவற்றைக் கேட்கும்படி. . .