புதன்கிழமை வணங்கினால் கல்விச் செல்வம்!
நம் மனதுள் கலையையும் அவற்றை அறிந்து உணரும் ஞானத்தையும் தருபவர் புதன். அப்பேர்ப்பட்ட புதனுக்கு அருளியவர் ஸ்ரீஆதிசொக்கநாதர். இவர் குடியிருக்கும் திருவிடத்தை, புதன் க்ஷேத்திரமாகப் போற்று கின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத் தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஆதிசொக்கநாதர் கோயில். அம்பிகை - ஸ்ரீமீனாட்சி அம்பாள்.! பாண்டிய மன்னன் ஒருவன், பக்தியிலும் இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந் தான். ஒருமுறை இடைக்காடர், தாம் எழுதிய செய்யுளை மன்னரிடம் வாசித்துக் காட்டினார். பாடலின் அர்த்தத்தில் திளைத்த மன்னன், அவர் மீது பொறாமைப்பட்டான். இதனால், பாடலைப் பற்றி ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தான். இதில் கூனிக்குறுகிப் போனார் இடைக்காடர். விறுவிறுவெனக் கோயிலுக்குள் சென்று, சிவனாரின் சந்நிதிக்கு முன் நின்றார். மன்னன் அவமதித்ததைச் சொல்லி வருந்தினார்.. . .