பிஸினஸ் சமூகம் - நகரத்தார்கள்!
ஏவி.மெய்யப்பன் செட்டியார்! நகரத்தார்களுக்கு கைவந்த பிஸினஸ் என்றால் வட்டிக் கடை நடத்துவதுதான். ஆனால், 19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே வட்டிக் கடை தொழிலிலிருந்து சிலர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்தனர். அப்படி வந்த தலைமுறைகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் அப்பச்சி ஏவி.மெய்யப்பன் செட்டியார். 1907, ஜூலை மாதம் 28-ம் தேதி பிறந்தார் ஏவி.மெய்யப்பன் செட்டியார். அப்பா, ஆவிச்சி செட்டியார் காரைக்குடியில் பலவிதமான பொருட்களை விற்கும் கடை நடத்தி வந்தார். அவரது அப்பா கோலாலம்பூரில் வட்டிக் கடை நடத்தினாலும், அவருக்கு வட்டித் தொழிலில் தொடர்ந்து ஈடுபட விருப்பமில்லை. எனவே, காரைக்குடியில் ஏ.வி. அண்ட் சன்ஸ் பெயரில் கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் பல புதிய யுக்திகளை அந்த காலத்திலேயே கையாண்டவர் ஆவிச்சி செட்டியார். 'ஒரே. . .