''கால் காசு சம்பளமானாலும் அது அரசாங்க உத்தியோகமா இருக்கணும்னு சொல்றது அந்தக் காலம். இப்ப தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறவங்கதான் அதிகம். நம்ம திறமையை வெளிப்படுத்துறதுக்கும் அதுதான் சரியான இடம். இங்கதான் நம் அப்பாவின் வாழ்நாள் சம்பளத்தை நாம் ஒரே வருடத்தில் எட்ட முடியும்'' என்று ஆரம்பமே கலக்கலாகப் பேசினார் மாலினி கணேசன். இந்த வார திருமதி எஃப்.எம்.-ஆன அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போமா? ''எங்களுக்குத் திருமணம் 2004-ல் முடிஞ்சது. திருமணம் முடிந்து ஏழு வருடம் ஆகுது. எங்கள் திருமண வாழ்க்கை ஆரம்பத்தின்போது அவருக்கு 10,000 ரூபாய்தான் சம்பளம். மூன்று வருஷத்துக்கு முன் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்வாகப் பதவி உயர்வு கிடைத்ததனால 26,000 ரூபாய் சம்பளத்துல இப்ப இருக்காரு. காசு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் எப்பவுமே அவரை தன்னிறைவா. . .