மார்ச் மாதம் வரப் போகிறது. நிதி ஆண்டும் முடியப் போகிறது. மாதச் சம்பளக்காரர்கள் பலரும் வருமான வரி செலுத்துவதைக் குறைப்பதற்கு பல முதலீடுகளை தேடித் தேடி செய்து கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் ஏதோ ஒரு வரிச் சலுகை தரும் ஃபண்டில் பணத்தைப் போடுவதைவிட, அவர்கள் தேடுகிற விஷயத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிற மாதிரி இந்த வாரம் வரிச் சலுகை தரும் ஒரு ஃபண்டை பார்ப்போம். 80சி பிரிவின் கீழ் நாம் ஒவ்வொருவரும் 1 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்வதன் மூலம் வருமான வரி விலக்குப் பெறலாம். 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்வதற்கு இன்ஷூரன்ஸ், பிராவிடன்ட் ஃபண்ட், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (5 ஆண்டு லாக்-இன் பீரியட்), என்.எஸ்.சி. என பலவகை இருந்தாலும், இ.எல்.எஸ்.எஸ். என்று சொல்லக்கூடிய டாக்ஸ் சேவர் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலம். இதற்கு பல காரணங்கள். 1. 80சி பிரிவின் கீழ்வரும் முதலீடுகளிலேயே மிகக். . .