'மரம் வைத்தோம்’ என்பதுதான் பெருமைக்குரியது. 'மரத்தை வெட்டினோம்’ என்பதையும் பெருமையாகச் சொல்லத்தக்கதாய் மாற்றிவிட்டது 'தானே’! புயல் காற்றின் கோர தாண்டவத்தில் கடலூர் மாவட்டத்து நிலப்பரப்பில் வாழும் மக்களைவிட, மரங்களுக்கு நேரிட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். ஆனால், அந்தச் சோகம் வெளிச்சத்துக்கு வராமலும் மற்றவர்களால் அதிகம் உணரப்படாமலுமே போனது. ''எங்க முப்பாட்டன் வெச்ச பலா மரம் இது!'' என்று வேரோடு சாய்ந்த பலா மரத்தைக் காட்டி ஒருவர் அழுவதும், ''எங்க தாத்தா வெச்ச முந்திரி மரம் இது!'' என்று முந்திரியைக் காட்டி ஒருவர் மூச்சடைக்க நிற்பதுமான காட்சிகள் கடலூர் மாவட்டம் எங்கும் காணக்கிடைக்கின்றன. ''மரங்கள் இல்லாத சோகம், வருஷம் ஆக ஆக இன்னும் அதிகமாகவே செய்யும்'' என்கிறார் ஒரு விவசாயி. இப்படிப்பட்ட நிலையில், பல ஆயிரம் பேர் கடலூர் மாவட்டத்தில். . .