'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி
735 கிராமங்கள்... 1,000 ஹெக்டேர் பலா மரங்கள்... 22,500 ஹெக்டேர் முந்திரித் தோப்புகள்... 58,000 ஹெக்டேர் நெற்பயிர்கள்... 2,00,000 வீடுகள்... 30,00,000 மக்கள்... இழப்புக்களின் பட்டியல் நீள்கின்றது... ஒரு கண்ணீரின் கனம் அறிவீர்களா? ஒரு புன்னகையின் உற்சாகம் உணர்வீர்களா? ஒரு நம்பிக்கையின் விதை விதைப்பீர்களா? 'தானே’ புயல் பறித்துக்கொண்ட பூமியைப் புனரமைக்கும் ஒரு வாசலாக பிரமாண்ட ஓவியக் கண்காட்சிக்குக் களம் அமைத்து இருக்கிறான் விகடன். தமிழ்க் கலையுலகின் அரிய நிகழ்வாக, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த பிரபல ஓவியர்களின் ஓவியங்கள் இடம்பெறும் பிரமாண்டமான கண்காட்சி இது. 'தானே துயர் துடைப்போம்’ திட்டத்தின் நிதி திரட்டும் நிகழ்வுக்குத் தங்களின் 'மாஸ்டர் பீஸ்’ படைப்புகளை ஓவியர்கள் மனமுவந்து அளித்து இருக்கிறார்கள். அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கலை ரசனை மிளிரும் ஓவியங்கள் இடம்பெறும் இந்தக் கண்காட்சியின் ஓவிய விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி அனைத்தும் 'தானே புயல் நிவாரணப் பணி’களுக்கு வழங்கப்படும். கண்காட்சியைப் பார்வையிட்டு கடலூர் -. . .