# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count29
save
print A+     A-
தமிழகம்... இருளகம்!

''இந்தியாவின் மின் தேவை 2017-ல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நிலக்கரியைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் அனல் மின் திட்டங்களே இந்தத் தேவையில் 60 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்யும். அந்த முக்கியமான தருணத்துக்கேற்ப நாங்கள் இப்போதே திட்டமிடுகிறோம்!''  - இந்தியப் பிரதமரோ, மாநில முதல்வர்களோ, அமைச்சர்களோ பேசியது அல்ல இது. சென்னை அருகே உள்ள மணலியில் அண்மையில் தொடங்கப்பட்ட 'தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இட்டாரு இஷிபாஷி பேசியது.  ஜப்பானிய நிறுவனமான இது, அனல் மின் நிலையங் களுக்குத் தேவையான மின் சாதனங்களைத் தயாரிக் கும் நிறுவனம். இந்தியாவின் மின் தேவைக்கான திட்டங்களை நம்முடைய அரசியல்வாதிகள் திட்டமிடாமல் இருக்கலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தெளிவாகத் திட்டமிடுகின்றன! 'தோஷிபா - ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத் தொடக்க விழாவில் நம்முடைய முதல்வரும். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Vaithi1 Years ago
Kutankulam project is nearing completion or going to start? Where where all this people so long. Every thing has its own plus and minus. When you have nothing to gain at least have another 30 seconds of power supply. DMK ADMK one letter more that is it, People have to change, accept energy sector needs an advancement, nuclear is one effective solution to that.May god bless Tamil Nadu.
Priya1 Years ago
no use of talking abt past .plsend tht tamilnadu elrc team to guarat and ask them to meet sro modi and GEBOARD ,ANDLEARN HOW THEYMANAGE POWER .NO PWERCUT INGUJ
SHAME TO TAMILNADU
Comment through ipad1 Years ago
அம்மா
Suresh1 Years ago
[[கடந்த 2005-ல் தமிழகத்தின் மின் தேவை 7,662 மெகா வாட்; உற்பத்தி 9,600 மெகா வாட்.]]

இப்ப சொல்லுங்க உங்க புள்ளிவிவரத்தை. இதே திமுக ஆட்சி இருந்தப்ப, நிர்வாக திறமையில்லைன்னு ஒரே போடா போட்டுட்டீங்களே


ADMK was ruling Tamilnadu until May,2006. It's all done by your kalaingar between 2006-2011. Please try to understand before commenting.
Ramanan1 Years ago
தமிழகத்தில் கிடைக்கும் நிலக்கரி மத்திய அரசுக்கு சொந்தம். ஆனால் கேரளாவில் , கர்நாடகத்தில் கிடைக்கும் தண்ணீர் அந்த அந்த மாநிலத்தின் சொத்து. தமிழகத்தின் சுற்று சூழலை கெடுத்து எடுக்கும் மின்சாரத்தை (நெய்வேலி , கூடங்குளம் ) மத்திய அரசு குரங்கு அப்பத்தை பங்கிட்ட கதையாக பிரித்து கொடுக்கும். ஆனால் அவர்கள் நம் வாழ்வாதாரத்திற்கு தண்ணீர் தர மாட்டார்கள். ஏன் ஒரு அணுமின் நிலையத்தை கேரளாவில் வைத்து உங்களால் தமிழகத்திக்கு மின்சாரம் தர முடியுமா? கேரளா இங்கிருந்து பெற்றுகொள்வார்கள். தரமாட்டார்கள் !!!. நாம் எப்படி தேசிய ஒருமைப்பாட்டை பற்றி யோசிக்க முடியும்?
Cavitha1 Years ago
கதிர்வீச்சின் பரிமாணம் என்ன என்று தெரிந்தால் யாரும் கூடன்குளம் மின்சாரம்தான் வேண்டும், நெய்வேலி மின்சாரம் வேண்டாம் என்று அடம் பிடிக்க மாட்டார்கள். கூடங்குளம் தமிழ்நாட்டுக்கு மின்சக்தி அளிக்க ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும் சிங்களனுக்கு உதவவே செயல்படும் என்பதையும், அதன் ஆபத்தை உணர்ந்தே கல்பாக்கத்திலோ மும்பயிலோ ஆரம்பிக்காமல் தென் தமிழகத்தில் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது சீக்கிரம் புரியும்.
Yuva1 Years ago
குடுங்கப்பா இதையும் பன்னாட்டு நிறுவனங்களிடம். இன்டர்னேஷனல் பிஸினெஸ் கார்ட்டெல்களிடம் மாட்டிக் கொண்டு விழிக்கப் போவது மக்கள் தான், அரசியல்வாதிகளல்ல. அவர்கள் பொட்டி நிரம்பிக் கொண்டே தான் இருக்கும். தற்காலிக ஏற்பாடாகவாவது கூடங்குளம் உற்பத்தியை ஆரம்பித்தே ஆக வேண்டும். 2 வருடங்களோ, 3 வருடங்களோ, மாற்று ஏற்பாடுகள் செய்து பின்னர் கூடங்குளம், கல்பாக்கம் நிலையங்களை மூட மத்திய அரசிற்கு கடும் நெருக்கடி தரலாம். எண்ணூர் மற்றும் பிற மின் நிலையங்களைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் செய்யறதுக்கு நேரம் இருக்குமா, இல்லே இன்னும் திமுக, சசி
selvaperia1 Years ago
இந்தியாவிலேயே முதல் இருண்ட மானிலமாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவாகிய பொய்லலிதாவையே சாரும். தான் ஆட்சிக்கு வந்தால், 3 மாதத்தில் மின்சார பற்றாகுறையை சரி செய்துவிடுவேன் என்று எப்படி, ஏன் சொன்னார்? ரோம் நகரம் பற்றி எரிந்தபோது, நேரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல், தமிழகம் இருண்டு, மருண்டு, திக்கி, தெனரிக் கொண்டு இருக்கும்போது, தன் மேல் உள்ள வழக்கு, சசி, நடராஜன், இவர்களின் சமூகங்கலை கைது செய்து, தான் தப்பிக்க வழிகலை உருவாக்குவதிலேயே முழு கவனமும் இருக்குது.
அன்பு1 Years ago
"தமிழகம்... இருளகம்!"--------> இது 1968-ல் ஆரம்பம் ஆனது. தீய சக்திகள் ஆட்சிக்கு வந்தது முதல் பாதாளவாசிகள் தமிழர்கள்.
அன்பு1 Years ago
"''தமிழகத்தின் மின் தேவைக்கு கூடங்குளம் அணு உலையைச் செயல்பட அனுமதிப்பதுதான் தீர்வு!'' என்கிறார். பிரதமர் மன் மோகன் சிங்கும் காங்கிரஸ்காரர்களும் அதையே சொல்கிறார்கள் என்றால், இவர்கள் யாருடைய தூதர்கள்?"---------> அவர்கள் யாருடைய தூதுவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். மின் உற்பத்தியைத் தடுக்கும் அன்னியக் கைக்கூலிகளை, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் வெள்ளைக்கார மதக் கும்பலை அடக்கி ஒடுக்கி நாட்டை விட்டே விரட்டி அடிப்பதை முதலில் செய்யுங்கள்.
Yuva1 Years ago
ஜாலிவாலி சொன்னது எனது குடும்பத்தார் கூறிய காமென்ட். "கரண்ட வேற பொசுக்கு பொசுக்குனு நிறுத்திப்புடறான்" - இது என் அம்மா. "யூ.பி.எஸ். வெச்சிருக்கிற நீங்களே சலிச்சிக்கிட்டா, விளக்குக்கு எண்ணெய் கூட வாங்க முடியாதவங்க நிலையை யோசிச்சிங்களா" - இது நான். "அடப்போடா, யூ.பி.எஸ். இருந்தா என்ன, அது சார்ஜ் ஆகறதுக்காவது போதுமான நேரம் கரெண்ட் வேண்டாமா?" - என் அம்மாவின் பதில். ஒன்றுமே அதற்கு மேல் பேச முடியவில்லை.
Rajendran1 Years ago
ஏன் அரசு மின்சாரத்தை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது? விலைக் கட்டுப்பாட்டை மட்டும் அரசு வசம் வைத்திருக்கலாமே? அதுதான் வளர்ந்த நாடுகளில் நடக்கிறது. அப்படி இருந்தால் இந்த நிலை வந்தே இருக்காது.
Cavitha1 Years ago
"கூடங்குளத்தில் தங்கள் சரக்கை விற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஷ்ய நாட்டின்......"
Cavitha1 Years ago
மின் தட்டுப்பாடு போக உடனே கூடங்குளத்தை திற என்று கூச்சலிடுபவர்கள் ஏன் நெய்வேலிக்கு போக மறுக்கிறார்கள்? ஒரு வேளை கூடங்குளம் மின்சாரம் போல அதை சிங்களனுக்கு அனுப்ப இயலாதோ? அல்லது வடநாடுகளுக்கு போகும் மின்சாரத்தை நாம் கேட்க கூடாது என்பதாலா? தேசியம் பேசும் காங்கிரஸ்காரர்கள் குறைந்தது நெய்வேலி மின்சாரத்துக்கும் காவிரி தண்ணீருக்கும் ஒரு இணைப்பாவது ஏற்படுத்தலாமே.
dineshmoorthy1 Years ago
அம்மாவுக்கு ஓட்டு போட வேண்டாம், அய்யாவுக்கு ஓட்டு போட வேண்டாம், சரி யாருக்கு போடரது, (மத்ததுக எல்லாம் தல இல்லாததுக ) - யாரவது படிச்ச வேகம் உள்ள கட்சி இருக்கா, யாராவது வழி காட்ட முடியுமா, இதுவரை எனக்கு ஒரு நல்ல ஆளுக்கு ஓட்டு போட்ட திருப்தி இல்லை. விகடனாவது வழி காட்டுமா
vinod1 Years ago
2005ல் மின்சாரம் உபரியாக இருந்தது. அப்பொழுதும் 2 புதிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு திட்டம் வரைவு கொடுக்கப்பட்டு அதன் அடிக்கல்லும் ஜெயாவால் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பின் வந்த அரசு தான் அதனை செயல்படுத்தவில்லை என்பது உலகறிந்த விஷயம். இதை புரியாதவன் தான் ஏதோ ஜெயா எதுவும் செய்யவில்லை என பிதற்றுவான். இன்றைய நிலையில் ஜெயா என்ன அனைத்து தமிழர்களும் தலை கீழாக நின்றாலும் மத்திய அரசு ஒதுக்கித்தரவில்லையெனில் அடுத்த ஒரு ஆண்டுக்கு மின் வெட்டு சரி சய்ய இயலாது.
முஹம்மது ரஸ்வி1 Years ago
இலவசங்களுக்கு மயங்கி வாக்களித்துவிட்டு இதெல்லாம் கேட்கப்படாது. நாங்கத்தான் இலவச டீ.வி, மிக்ஸி, கிரைன்டர், ஃபேன், ஆடு, மாடு போன்றவற்றை தருகிறோமல்லவா? பின் என்ன?

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இலவசங்களை வழங்க அக்கறை எடுத்துகொள்கிறார்களே தவிர, மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர என்ன செய்யலாம் என்று தொலைநோக்கு பார்வை தேவையில்லை அண்மை நோக்கு பார்வை கூட இல்லை. அவர் வந்தால், குடும்பத்தோடு கொள்ளையடிக்கிறார், சரி இவரை ஆட்சிக்கு கொண்டுவந்தால், ஒரே குடும்பம் அடிக்கிறதை எல்லாம் அடித்துவிட்டு உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிக்கொண்டு இன்று சிறைக்குள் செல்கிறார்கள். இதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசனைகளிலேயே இவர்கள் காலம் கடக்கிறது, மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் பகுதிகளில் தப்பி தவறிக்கூட மின்வெட்டு இருக்காது. அவர்களுக்கும் இதை கொடுத்தால், கொஞ்சமாவது உணர்வார்கள் என்று தோன்றுகிறது.
Appan1 Years ago
இந்த 9 மதத்தில் ஜெஜெ ஏதாவது இது பற்றி செய்துள்ளாரா ?. இருக்கும் மின்நிலயங்களே ஒழுங்காக பாராமரிக்கப்பட வில்லை. இதுதான் ஜெஜெவின் செயள்கள். முக, சசி குரூப் பழிவாங்குவதை விட்டு உருப்படியா ஏதவது செய்தால் நாட்டிர்க்கு நல்லது.
Ranganathan1 Years ago
hopefully govt will turn only wen,MNC leave TN..
varadharajulu1 Years ago
'காற்றாலை' வருடம் முழுவதற்கான தீர்வு அல்ல....வருடத்தில் 3 மாதத்திற்கு மட்டுமே கிடைக்கும் தற்காலிக தீர்வுதான்.அதுவும் காற்றின் வீசும் வேகம் மற்றும் திசையை பொறுத்தது.அனல் மின்நிலையங்கள் நிலக்கரியை சார்ந்து இருக்க வேண்டிய நிலை. அதுவும் நிலத்தடி இருப்பு குறைந்து கொண்டே வரும் நிலை. உற்பத்தி செலவும் மிக அதிகம்.அணுமின் உற்பத்தி ஒன்றே நிரந்தர தீர்வாகும்.மூலப்பொருளான யுரேனியம் இந்தியாவில் தேவையான அளவிற்க்கு கிடைக்கிறது.உற்பத்தி செலவும் மிகக்குறைவே. தற்சமயம் நமது நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும்வரையுமாவது அணுமின் உற்பத்தியை மேற்கொள்ளலாம்.
mHn1 Years ago
[[கடந்த 2005-ல் தமிழகத்தின் மின் தேவை 7,662 மெகா வாட்; உற்பத்தி 9,600 மெகா வாட்.]]

இப்ப சொல்லுங்க உங்க புள்ளிவிவரத்தை. இதே திமுக ஆட்சி இருந்தப்ப, நிர்வாக திறமையில்லைன்னு ஒரே போடா போட்டுட்டீங்களே
நிரஞ்1 Years ago
சந்திரா, கலப்படம் ஏதும் பண்ணமா நாங்க எப்படி பிசினஸ் பண்ணுறது?
அதுனாலதான் அத தொடல..
சிஸ் [யன்]1 Years ago
"மு.க. குடும்பம் ஏன் இந்த மாதிரி மின்சாரம் உற்பத்தி செய்யும் துறையில் இறங்கவில்லை" ஐந்து வருடத்துக்கு ஒருமுறை சாக் அடிக்கும் என்றுதான்...
சந்திரா1 Years ago
தண்ணி மட்டும் தரமாட்டானுங்க. நம்ம நெய்வேலியை மட்டும் திருடி திங்கறானுங்க. இங்க இருக்குற ஆத்தா, தாத்தா, எல்லாத்துக்கும் அவங்க சண்டையை போடவே நேரம் சரியாயிருக்கு
Umasankar1 Years ago
தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமான நிலக்கரியில் மின்சாரம் தயாரித்து மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கிறோம். ஆனால் நமக்கும் பங்கு உள்ள காவிரி, முல்லை பெரியார், பாலாற்றிலிருந்து நமக்கு தண்ணீர் தரமாட்டார்கள். நமக்கே மின் பற்றாக்குறை இருக்கும்போது மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறோம். நமக்கு தண்ணீரும், மின்சாரமும் வேண்டும் என்று நெய்வேலிக்கு போய் மக்கள் ஏன் போராடக்கூடாது?
 Displaying 1 - 25 of 28
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
22-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices