# சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாசாலை கிளையில் சிபிஐ சோதனை # யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை # வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம் # இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம் # நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #


Comment count7
save
print A+     A-
அருந்தமிழ் நாள்காட்டி!

''திருவள்ளுவர் ஆண்டை மையமாக வைத்து, தமிழ் எண்களோடு உருவாக்கப்பட்ட தமிழ் நாட்காட்டியை கடந்த 13 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறோம். முதலில் வெறும் 500 நாள்காட்டிகளே விற்றன. இந்த ஆண்டு 10 ஆயிரம் நாள்காட்டிகள் விற்பனை ஆகின!'' - தமிழ்ப் பற்றிப் பேசப் பேச சின்னப்பத் தமிழர் முகத்தில் அத்தனை பெருமிதம். அரும்பாக்கம்- விநாயகபுரத்தில், 1999-ல் பல தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்ட 'தமிழம்மா’ பதிப்பகத்தின் நிர்வாகி இவர். 

''நமக்கு மொழியும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள். மொழியையும் இனத்தையும் காப்பதற்கான போராட்டத்தில் 25 முறைக்கு மேல் சிறை சென்றுள்ளேன். 'நம் மொழியிலேயே எண்களை வைத்துக்கொண்டு, ஏன் இன்னும் அயல்நாட்டு முறையில் ஆன நாள்காட்டியைப் பயன்படுத்த வேண்டும்?’ என்ற அடிப்படை சிந்தனைதான் இந்த நாள்காட்டி வெளியிடக் காரணம். இதன் நோக்கம் விற்பனை மட்டுமல்ல; தமிழ் உணர்வு மக்களிடம் சென்றுசேர வேண்டும் என்பதும்தான். இந்த ஆண்டு அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்காக, இந்த நாள்காட்டிகளை அச்சடித்து அனுப்பினேன்.

இந்த நாள்காட்டியின் இன்னொரு சிறப்பு, திருவள்ளுவர் படம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நம் கற்பனைக்கு உயிர் கொடுக்கப்பட்டதே இன்றையத் திருவள்ளுவர் உருவம்.

'மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்

பழித்தது ஒழித்து விடின்’- என்ற 280-வது குறட்பாவில் 'குடுமி வைத்துக்கொள்வது மட்டுமே அறம் சார்ந்த வாழ்க்கைக்கு அடையாளம் இல்லை’ என்று சொல்லி இருப்பார். அப்படிப்பட்டவர் எப்படி குடுமியுடன் வாழ்ந்து இருப்பார்?

இதேபோல், மணிப்பொறிகளையும் (கடிகாரம்) பல்வேறு வடிவங்களில் தமிழ் எண்களைக்கொண்டு வடிவமைத்து விற்பனை செய்கிறோம். இது, தமிழகத்தில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைவாக இருந்தாலும் தமிழ்ப் பற்று காரணமாக ஒரு சிலர் வாங்கிச் செல்கின்றனர். இந்தக் கடையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களையும் விற்பனை செய்கிறோம். அதில் வரும் லாபத்தைவைத்தே நாட்காட்டித் தயாரிப்பு போன்ற மொழி சார்ந்த செயல்களைச் செய்ய முடிகிறது'' என்கிறார்.

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ஜெ.தான்யராஜு


[ Top ]
saravan vijayan1 Years ago
நல்ல தமிழ்த் தொண்டு....தங்கள் பணி முழுமை அடைய வாழ்த்துக்கள்...
தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்1 Years ago
இது போன்ற நல்ல செய்திகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், எங்கு கிடைக்கும் என்றும் சொல்லலாம். அல்லது விகடனே ஆன்லைனில் விற்கலாம். ஏன் செய்வதில்லை? லாபம் நிறைய வருவதில்லையே அதனாலா? விகடனும் தன்னால் முடிந்த உதவிகளை சிறிய லாபத்துடன் செய்யலாமே?
அன்பு1 Years ago
"மொழியையும் இனத்தையும் காப்பதற்கான போராட்டத்தில் 25 முறைக்கு மேல் சிறை சென்றுள்ளேன். "-------> உங்களுக்கு அதுதான் மிச்சம். வேறு சிலர் முதல்வராகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறி இன்னும் தொண்டு செய்கின்றனர்.
Siva1 Years ago
வாழ்த்துக்கள்.
SAROJINI1 Years ago
நமக்கும் அது கிடைக்குமா?
Arun1 Years ago
வாழ்த்துகள் அய்யா...
Nithy1 Years ago
வாழ்க தமிழ்!!
Displaying 1 - 7 of 7
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
29-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
22-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices