''சென்றான் தலைவன் பணி நிமித்தம் நாட்கள் இல்லை; மாதங்கள் இல்லை மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ? கோழிகள் கூடடைந்துவிட்டன பொழுது சாய்ந்துவிட்டது ஆடு மாடுகள் தொழுவம் அடைந்தன சென்றான் தலைவன் பணி நிமித்தம் பசியும் தாகமும் வாட்டாதிருக்கட்டுமே!'' கணீர்க் குரலில் வாசிக்கிறார் ஸ்ரீதரன் மதுசூதனன். ''ஏதோ சங்கத் தமிழ்ப் பாடல் போல இருக்கிறதா? ஆனால், இது ஒரிஜினல் சீன மொழியின் செய்யுள்! இதுபோன்று சுமார் 305 கவிதைகளைக்கொண்ட 'ஷிழ் சிங்’ என்பதுதான் சீன மொழியின் 'கவித்தொகை’. தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ் தொகுத்ததாக நம்பப்படும் இந்தத் தொகுப்புதான் சீனாவின் சங்க இலக்கியமாகக் கொண்டாடப்படு கிறது!'' என்று வரலாறு சொல்லி ஆரம்பிக்கும் ஸ்ரீதரன், இந்தத் தொகுப்பை 'வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற தலைப்பில் நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்து, 'காலச்சுவடு’ பதிப்பகம். . .