மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!
''கோமதி சீனிவாசன் படத்தை எடுத்து வைத்துக்கொள்ளும்!'' - ஆபீஸ் வாசலில் இருந்து எஸ்.எம்.எஸ். தட்டியிருப்பார் போல, மெசேஜ் படித்து நிமிர்ந்தபோது, நம்முன் கழுகார் புன்னகையுடன் இருந்தார். ''கோமதி சீனிவாசனை இந்நாள் அரசியல்வாதிகள் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி விட்டது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், கோமதி சீனிவாசனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை திருச்சி நீதிமன்றம் விதித்துள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வலம் வந்த பெண் அமைச்சர்களில் ஒருவர், இந்தக் கோமதி சீனிவாசன். மொத்தம் நான்கு ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். 96 முதல் 2001 வரை எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் பதிவானது. அதில்தான், அவருக்கு மூன்று ஆண்டு மற்றும் நான்கு மாதங்கள். . .