Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகாராஜா

ஜூ.வி. நூலகம்

திவான் ஜர்மானி தாஸ் ( தமிழில்: பொன்.சின்னத்தம்பி முருகேசன்), சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை -83. விலை 300

'சமஸ்தானங்களை மர்மத்திரை மூடி உள்ளது. என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்துக்கும் தெரியவில்லை. வெளி உலகமும் உள்ளே புகுவதில்லை’ என்று, ஜவஹர்லால் நேரு ஒரு முறை எழுதினார். இந்தியாவின் எல்லைப் பரப்புக்குள் இருந்த மகாரா ஜாக்கள் என்ன செய்தார்கள்?

'மகாராஜாக்கள் தமது வாழ்நாளில் பெரும் பகுதியை உறங்குவதிலும் மது அருந்துவதிலும், மங்கை ஆட்டங்களிலும், சீட்டு விளையாட்டுகளிலும், வேட்டையாடுவதிலுமே கழித்தார்கள்’ என்று  ஜர்மானி தாஸ் சொல்லும் கதைகளைப் படிக்கும்போது, பல பக்கங்களை நம்பவே முடிய​வில்லை. இந்தப் புத்தகத்தை எழுதி​யவர் ஏதோ கதாசிரியரோ அல்லது வரலாற்று ஆய்வாளரோ அல்ல. கபூர்தலா மற்றும் பாட் டியாலா சமஸ்தானங்களில் அமைச்சராக இருந்தவர் இதைச்சொல்கிறார். தன் கண் முன்னால் எதைப் பார்த்தாரோ... சமஸ்தான மன்னர்களின் சேஷ்​டைகளுக்கு அவர் எப்படி எல் லாம் உதவிகள் செய்தாரோ... அவை அத்தனையையும் பட்ட​வர்த்தனமாகப் போட்டு உடைக்கிறார் ஜர்மானி தாஸ். சில நிகழ்வுகளைப் படிக்கும்போது கேவலமான புனைவுகளைவிட அவை மோசமாக உள்ளன.

திரைச்சீலைக்குப் பின்னால் ஒரு மகாராஜா தனது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவாராம். அமைச்சர்கள் ஒவ்வொரு பிரச்னையாகச் சொல்லச் சொல்ல, ராஜா தீர்வு சொல்வார். சில நிமிடங்களில் அப்படியே அவர் அந்தப்புரத்துக்குச் சென்றுவிடுவார். அமைச்சர்கள், ராஜாவுக்கு எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ராஜாவிடம் இருந்து பதில் வராது. பதில் வரவில்லை என்றால், கோரிக்கையை ராஜா ஏற்கவில்லை என்று அர்த்தம். இப்படி... திரைச்சீலைகள் தான் பல சமஸ்தானங்களை நடத்தி உள்ளன.

ஒரு மகாராஜா தனது பெரும்பாலான அமைச்சரவைக் கூட்டங்களை கழிவறையில்தான் நடத்தி உள்ளார். கழிவறையின் இருக்கையை ஒரு மேடையைப் போல அமைத்திருந்தாராம். தன்னு டைய அரசியல் ஆலோசகர்களாக மனநிலை பாதி க்கப்பட்ட ஐந்து பேரை வைத்திருந்தாராம் ஒரு மகாராஜா.

அந்தப்புரங்களுக்கு அப்பாவிப் பெண்களைக் கொண்டுவர ராஜாக்கள் நடத்திய நாடகமும், அப்படி வந்து சேர்ந்த பெண்கள் தங்களது வாரிசுகளை இளவரசர்களாகக் கொண்டுவர நடத்திய லீலைகளும் தகுதியற்ற வாரிசுகள் தனது அப்பாவை வீழ்த்துவதற்கு செய்யும் சதிகளும் அந்தக் காலத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் காலத் தையும் நினைக்க வைக்கிறது. தங்களது சுகபோக வாழ்க்கைக்கு கொஞ்சமும் சேதம் வந்துவிடக் கூடாது என்பதற்காக,ஆங்கில ஆட்சியாளர்களிடம் இந்த மகா ராஜாக்கள் காலடியில் விழுந்து​கிடந்ததைப் படிக்கும்​போது வேதனையாக இருக்​கிறது.  'அடிமைக் கலையில் அவர்​களுடைய அடுத்த கண்டு​பிடிப்பு என்ன என்பது ஆண்டவனுக்கும் அவர்களுடைய மனச்சாட்சிக்கும் மட்டுமே தெரி​யும்’ என்று சாட் டையைச் சொடுக்​குகிறார் ஜர்மானி தாஸ். ராஜஸ்தானைச் சேர்ந்த உதைப்பூர் மகாராஜா பதே சிங் போன்ற ஒரு சிலர் மட்டுமே ஆங்கிலேயரைத் துச்ச மென மதித்தனர் என்றும் ஜர்மானி வரலாறுசொல்கிறார்.

உங்களுக்கெல்லாம் பெரிய பதவி தரப்​போ​கிறோம் என்று சொல்லி ஏமாற்றி, அத்தனை சமஸ் தானங்களையும் ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் வல்லபாய் படேல் கொண்டுவந்ததும், இந்த மன்னர் களுக்குத் தரப்பட்டு வந்த மானியங்களை இந்திராகாந்தி தர மறுத்ததும் சரிதான் என்ற முடிவுக்கு வர, ஜர்மானியின் வாக்குமூலம் போது​மானது.

- புத்தகன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பாடமே துணை!
செய்தியும் சிந்தனையும் - சு.வெங்கடேசன் பேசுவார்!

எடிட்டர் சாய்ஸ்