சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி # பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம் # இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி # கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல் # வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை # ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல் # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு # ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு #


Comment count48
save
print A+     A-
மாற்று அரசியல் மலராதா..?

'மனிதர்கள் செய்யக்கூடிய மிக மோசமான ஏழு பாவங்களில் ஒன்று, கொள்கையற்ற அரசியல்’ என்றார் அண்ணல் காந்தி. ஏற்றுக்கொண்ட கொள்கைகளில் சிறிதும் சமரசம் இன்றி மக்கள் நலனுக்காகவே இயங்கும் அரசியல் கட்சி ஒன்றுகூட இன்று இந் தியாவில் இல்லை என்பதுதான் உண்மை. தான் நேர்ந்து கொண்ட லட்சியப்பாதையில் பொது மக்களை நடத்திச்செல்ல முயலாமல், அவர்களுடைய மலினமான மனோபாவங்களைத் தன் சொந்த வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் தரம் குறைந்த சந்தர்ப்பவாத சாகசமே தலைமைக்குரிய தகுதியாகிவிட்டது. எந்தத் தவறான பாதையில் தடம் பதித்தாவது பதவியைப் பெறுவது, அதிகாரத்தை அடைந்து அளவில்லாமல் பணத்தைப் பெருக்குவது, வாழ்க்கை தரும் இன்பங்களை வகை வகையாய் சுவைப்பது என்ற மூன்று அந்தரங்க ஆசைகளுடன் நம் பெரும்பாலான அரசியல்வாதிகள் 'பொதுத் தொண்டு’ என்னும் போலி வேடம் புனைந்து சமூக வீதிகளில் சஞ்சரிக்கின்றனர். 
Kuvalai Ezhil1 Years ago
கூட்டணி காலத்தின் கட்டாயம். சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது என்ற ஒரேகாரணத்தால் காங்கிரஸ் மக்கள்மனதில் பதிந்திருந்தது. ஆனால் ஆட்சியில் கோளாறுகள். ஒருநேரம் தமிழகத்தில் காங்கிரஸைக்காப்பாற்ற ராஜாஜி வேண்டியிருந்தார்.அவர் சமாளித்தபிறகு உள்ளடி வேலையில் அவர் விலக நேர்ந்தது. தனிக்கட்சி தொடங்கினார்.மயக்கும் காங்கிரஸ் மாயையிலிருந்து விடுபட கூட்டணியில் செர்ந்தார். படிக்காத காமராஜரை ப்பிடிக்கவில்லை. அவரிடம் பொறாமைகொண்டார் என்பதுபோல நினப்பதெல்லாம் பேதமை.அன்று காங்கிரஸ் வீழ்ந்தபோது தமிழகமே மகிழ்ச்சிக்குதியல் போட்டது.ராஜாஜியை வாழ்த்தியது. இப்போதும் காங்கிரஸுக்கு என்ன பெரிய ஆதரவு. இவருக்கே பிடிக்கவில்லை.திமுக தலைவர் பட்டம் பெற்றவரில்லயே செல்வாகுடன் இருக்கிறாரே என்ற பொறாமையாலா இவருக்குப்பிடிக்கவில்லை.அவருடைய அரசியல் சரியில்லை என்பதால்தானே,ஆகவே அபன்று ராஜாஜி செய்தது சரிதான் என்ப்படுகிறது..பழய வரலாற்றுக்குப் புதிய பொருள் இப்போது கற்பிப்பது சரியில்லை.விகடனாருக்கும் என் கருத்து சரியாகப்படும் என்பது ஊகம்.
usha1 Years ago
மாற்று அரசியல் மலராதா....மலர வேண்டும் என்றால்,உங்களின் செயல் பாடுகள்,மக்களின் நலனை நேக்கியதாக மட்டும் இருக்க வேண்டும்,ஆனால் உங்களில் எத்தனை பேர் ஈகோ இல்லாமல் ஒன்று கூடுகீறிகள்,முதலில் நீங்க எல்லாம் மக்களின் கள பணியாளராக மாறுங்கள் பிறகு மக்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.......
Sivan1 Years ago
முதல் நபர்: ஞானம் ....அப்பா ஞானம் ...UP-இல கானம்...நாளை காலையில் போகப்போவது காங்கிரஸ் மானம்....
இரண்டாம் நபர்: ஏன் நாளை காலையில? இன்னக்கு சாயுங்காலம்...போகப்போவுது உங்க காங்கிரஸ் மானம்...
முதல் நபர்: ஞானம் ....அப்பா ஞானம் ...UP-இல கானம்...காங்கிரஸ் கானம்
Prakash1 Years ago
திரு.மணியன் இன்றைய தமிழனின் மனநிலை புரியாமல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்.தமிழ்,இனம்,மானம்,போன்றவற்றை தமிழன் அடகு வைத்து எத்தனையோ காலம் கடந்துவிட்டது.இன்று தமிழன் என்பவன் எந்தகொள்கையும் அற்றவன், முற்றிலும் நம்பதகாதவன்,பணத்துக்காக எதையும் இழக்க தயாராக உள்ளவன்.இதனால்தான் வைகோகளும்,காம்ரேட்களும் தமிழனிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தமுடியவில்லை.ஈழ பற்று,முல்லைபெரியார் பிரச்சனை போன்றவற்றில் பாதிக்கபட்டவர்களை தவிர போராட முன் வருபவர் மிக மிக சிறு பான்மையே
Sakthivelu1 Years ago
எல்லா வளங்களையும் விரைவில் வற்றச் செய்து வருகின்றனர் அரசியல் போர்வையில். இலவசங்களால் யார் பயனடைகின்றனர்? வணிகமயமாக்கப்படும் கல்வியால் வறியவர்கள் நலம் பெப்றுவார்களா. ஏச்சுப் பேச்சு அரசியல், வளமான வாழ்வு வாழும் வளமிக்கக் குடிகளுக்கும் சாதி சலுகை......இவையெல்லாம் சீர் செய்யும் ஜனனாயக மரபு தேவை.
Selva1 Years ago
Communist parties can align with power star Srinivasan instead of aligning with vaiko...
sekar1 Years ago
One of the best political analysis I have ever read in the past 50 years, I recollect the days of 1967 elections when I was just a college student.Mr.Manian had summed up 50 years history in just one page. Hats off..
Narayanan1 Years ago
அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்கள் அமைத்துவிட்ட நிலையில் தனியாக கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒன்று வேண்டுமா? கடந்த 10 தேர்தல்களில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 10% வாக்குகள் பெறாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். அந்த கட்சிகள் கலைக்க பட வேண்டும் என்ற புதிய சட்டம் வரவேண்டும்.
Manithan1 Years ago
திரு.கக்கன் எலிக்கறி சாப்பிடச் சொன்னதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. -- மிக மிக தவறான தகவல்... பக்தவத்சலம் பெயரே அடிபட்டது,. அதும் போக, காமராஜ் நாடாரு கறி தின்ன மாட்டாரு... சுண்டெலிய தின்னா சும்மா விட மாட்டாரு என்று கோஷம் திமுகாவல் பிரபலபடுத்தப்பட்டது....
Manithan1 Years ago
காமராஜர் தோற்றது அவரது தவறா? -- ஆம், காமராஜர் தமிழக உணர்வுகள், கல்வியில் தாய்மொழி அல்லது ஆங்கிலம் என்பது பற்றிய கவலையின்மை, இப்போதைய காங் போல் மத்திய அரசிற்கு கொடி பிடித்த நிலை... யாரையும் எடுத்தெறிந்து பேசுதல் , கொல்லைவழியாக நாடார் ஆதிக்கத்தை அனுமதித்தது (அதனால் தான் விருதுநகரில் நாடார் அற்றவர்கள் திரண்டு வாக்களித்தது.. )எளிமை தான் ஆனால், கிராமங்கள் முன்னேற எந்த திட்டமுமின்றி இருந்தது என பல உண்டு. வைகோவிற்கு மக்கள் வாக்களிக்காதது பிழை அல்ல... 100% சரியான முடிவு.
வாகீசன்1 Years ago
மக்கள் சரியானதை ஆதரிக்கவேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கம் அப்பன் அவர்களே. வை.கோவின் புலிப்பற்று ஒரு வாக்கையும் குறைப்பதில்லை. அவர் தமிழகத்தின் சகல பிரச்சனைகளிலும் தன்னை வருத்திக்கொள்பவர். அவர் 2% வாக்கு பெற்றது அவரது பிழையல்ல, தமிழகத்தின் பிழை. காமராஜர் தோற்றது அவரது தவறா? அரசியல் என்பது மக்களின் பக்கம் போவதல்ல, மக்களை சரியான பக்கம் போகவைப்பதே. அதனை செய்ய முயற்சிக்கும் அனைவரையும் ஆதரிக்கவேண்டிய நல்லோரின் கடமை. இந்தக் கட்டுரை வைகோவின் பின்னால் மற்றவரை அணிதிரள வைக்க முயன்று தோற்றதால் வந்திருக்கின்றது.
Cavitha1 Years ago
திரு.அப்பன் அவர்கள் சுட்டிக்காட்டிய காரணங்களுடன் அரிசி கிடைக்காமல் பலர் சாப்பிட கஷ்ட்டப்பட்டனர். திரு.கக்கன் எலிக்கறி சாப்பிடச் சொன்னதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. ஹிந்தி போராட்டத்தில் ஏறக்குறைய நூறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவையும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
Sadana1 Years ago
Fantastic insights, Thamizharuvi Manian. A world class analysis - maybe the field is state politics, nevertheless a great treatment of facts and inferences.
I agree, based on past 50 years of politics in Tamil Nadu, that your crystal ball is as accurate as any other.
Baskaran, USA1 Years ago
நலத்திட்டங்கள், புதிய சட்டங்கள், இயற்றப்பட்டும் போது அதை மக்கள் ஆதரித்து ஓட்டு போட்ட பின்பு அதை நிறைவேற்ற வேண்டும். ஆட்சி மாறிய பிறகு சட்டங்கள் மாற்றினாலோ நலத்திட்டங்களை நிறுத்தினலோ அதையும் மக்கள் மன்றத்தில் வைத்து முடிவு செய்ய வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் கொடுப்பதனால் இப்போதுள்ள மனிதனின் அதிகப்படியான ஆசைக்கும் தேவைக்கும் சொந்த நலனுக்கு அந்த அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அரசியலை நடத்தும் முறையில் மாற்றம் வந்தால் எல்லோரும் நல்லவர்கலே.
avsuresh1 Years ago
இந்த ஓட்டு பொறுக்கும் அரசியலில் எல்லாம் சாத்தியம் !
Hari Sankar1 Years ago
அரசியல் கட்சிகளின் கூட்டணி அணிவகுப்புக்கு ஊழல் செய்தவர்கள், ஊழல் செய்யாதவர்கள் என்பதன் அடிப்படையில் ஒரு சதவீதம் கூட தகுதி கூடுவதோ, குறைவதோ கிடையாது!!! மக்களிடம் ( ஏமாற்றியோ அல்லது ஏமாற்றாமலோ) ஓட்டு வாங்கும் சக்தி மட்டும் தான் அடிப்படை... இவரது கணிப்பு மிகச்சரியாக அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு நடைமுறைக்கு வரும்!!!! அதற்குமுன்னர், ஏதாவது செய்து அதிமுக இன்றைய பிரச்சினைகளுக்கு முடிவு கண்டால் மட்டுமே அந்தக் கொள்கையில்லா கூட்டணியின் வெற்றியைத் தவிர்க்க முடியும்!!!! கூடங்குளத்தை அதுவரை குழப்பிக் கொண்டிருந்தால் அந்தக் கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி தான்!!!!!
Hari Sankar1 Years ago
ஏற்றுக் கொண்ட கொள்கைகளில் சிறிதும் சமரசம் இன்றி தம் மக்கள் நலனுக்காகவே இயங்குகின்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதே?
selvaperia1 Years ago
அரசியல் கட்சியைதான் பலபடுத்தனும், மாற்றனும்ன்னு பக்கம் பக்கமா எழுதறாங்க! ஆனால், இந்த நசுங்கி, சுருங்கி, மழுங்கிப் போன மக்களைன் வாழ்க்கையை மாற்றி, விடுதலை கொடுப்பது எப்போது?
Balasubramaniam1 Years ago
மிக சிரந்த கட்டுரை. பார்பக்ஷமில்லாமல் எழுதப்பட்டிருக்கிரது. வாழ்துக்கல்.










Marc1 Years ago
கொள்கையற்ற கூட்டணி உருவாக காரணம் நம் அரசியலமைப்பு சட்டமும் தேர்தல் முறையுமே காரணம்.பாராளுமன்ற, சட்டமன்ற பெரும்பாண்மையை வைத்து பிரதமர், முதல்வர் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். இதை தவிர்த்து மக்களே நேரிடையாக பிரதமரையும், முதல்வரையும் இரண்டு சுற்று வாக்கு பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை சட்டமாக்க வேண்டும்.அதாவது முதல் சுற்றில் பிரதமர் அல்லது முதல்வர் பதவிக்கு எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் தனி தனியே வேட்பாளர்களை போட்டியிட செய்து, அவற்றில் முதல் இரண்டு இடம் வருபவர்களுக்கு இரண்டாவது சுற்றில் போட்டியிட வைத்து தேர்வு செய்யலாம். நம்மை விட பொருளாதாரத்தில் குறைந்த பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த முறை பின்ப்ற்றப்படும்போது நம்மால் ஏன் முடியாது?.
அன்பு1 Years ago
"ஊழலோடு வகுப்புவாத முத்திரையும் பா.ஜ.க. முகத்தில் பளிச்சிடுகிறது."-----> யப்பா, கண்ணைக் கட்டுதே. மணியன் மதச்சார்பற்றவர் என்பது ஆங்காங்கே வெளிப்படுத்தும் பாணியே அழகுதான்.
அன்பு1 Years ago
"கலைஞரிடம் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேறியதும்,"------------> எம்ஜியார் அவராக வெளியேறவில்லை. கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். உண்மைகளை மாற்றி எழுதலாமா மணியன் அவர்களே?
அன்பு1 Years ago
"கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஏற்பட்ட 'யார் பெரியவர்’ என்ற போட்டியில், 1972-ல் கழகம் இரண்டானது."-----------> தமிழருவி மணியன் தவறாகச் சித்தரிக்கிறார். வரலாற்று உண்மைகளை மறைக்கிறார்.
banu1 Years ago
அய்யா, நீங்கள் எம்.ஜி.ஆரை வெறும் நடிகராக மட்டும் பார்த்தது மிகவும் தவறு.
காமராஜருக்கு பிறகு மனித நேயம் கொண்ட முதல்வராக இருந்தது இவர் மட்டும்தான்.
வெற்று கட்டுரைகள் மட்டும் எழுதிக்கொன்டிராமல் மக்களுக்கு ஏதாவது செய்யப்பாருங்கள். உண்மை நிலவரம் உங்களுக்கு புரியம்.
ramany1 Years ago
மிகவும் நல்ல கட்டுரை..எல்லாம் கனவு மட்டும்...
 Displaying 1 - 25 of 48
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
07-மார்ச் -2012
சென்ற இதழ்
04-மார்ச் -2012

*Flip Version not supported in Devices