''ஆறாவது படிக்கும் என் மகள், தன் தோழிகளின் வீட்டில் 'பெட்’ நாய்கள் வளர்ப்பதைப் பார்த்துவிட்டு, நாய் வளர்க்க வேண்டும் என்கிறாள். 'கடித்துவிடும்', 'தொற்று நோய் வரும்' என என் கணவர் தயங்குகிறார். பாதிப்புகள் எதுவுமின்றி செல்லப்பிராணிகள் வளர்க்க வழி கூறுங்களேன்'' என்று கேட்டிருக்கும் விருதுநகர் மகாலட்சுமிக்காக குறிப்புகள் தருகிறார், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கால்நடை உதவி மருத்துவர் க.ஜவஹர். ''ஒரு சில கவனக் குறிப்புகளை வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றினால், செல்லப்பிராணிகள் நமக்கு அனுகூலமாகவே இருக்கும். கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து அபார்ட்மென்டுகளில் சிறை போல மாறிவிட்ட சூழலில், வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு செல்லப்பிராணிகள், பெரும் வரப்பிரசாதம். உதவும் தன்மை, அன்பு, கருணை போன்ற குணாதிசயங்கள் மட்டுமன்றி, இக்காலப் பிள்ளைகளின் மன அழுத்த நெருக்கடிக்கு செல்லப்பிராணிகள் அருமையான வடிகால். எனவே அதை வளர்ப்பது. . .