இளம் பெற்றோர்களே...இங்கே கவனியுங்கள் !
கூட்டுக் குடும்பமாக இருந்தவரை குழந்தை வளர்ப்பு சுலபமானதாக இருந்தது. குழந்தை கூடுதலாக இரண்டு முறை 'கக்கா' போனால், 'வயித்துக்குச் சரியில்லை பார்த்துக்கோ’ என்று உஷார்படுத்துவார் பாட்டி. காய்ச்சலில் உடம்பு கொதித்தால், 'பருத்தித் துணியை தண்ணியில் நனைச்சு, உடம்ப துடைச்சு விடு’ என்று முதலுதவி சொல்வார் தாத்தா. இன்றோ நியூக்ளியர் ஃபேமிலி கலாசாரம்... இளம் பெற்றோருக்கு ஆலோசனைகள் கூற பெரியவர்கள் யாரும் உடன் இல்லை. குழந்தையின் அழுகை தொடங்கி, சாப்பாடு ஊட்டுவது வரை குழப்பங்களும் அச்சங்களும் பிடித்துக் கொள்கின்றன பெற்றோரை. அவர்களுக்குக் கைகொடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஆர்.பிரதீப்ராஜ்... ''பால் குடிச்சவொடனே கக்கிடுது டாக்டர்.. என்பதுதான் புது அம்மாக்களின் முதல் கம்ப்ளெயின்ட். பால் குடிக்கும்போது காற்றையும் சேர்த்து உள்ளிழுக்கும். எனவே, தாய்ப்பால் கொடுத்தவுடன் குழந்தையைத் தோளில். . .