விகடன் 'தானே’ துயர் துடைப்பு அணி
தமிழக ஓவியக் கண்காட்சிகள் வரலாற்றில், நிச்சயம் அது ஒரு மைல்கல்! 'தானே புயல் பாதிப்பின் துயர் துடைக்கும் வகையில், ஓவியக் கண்காட்சியை நடத்துகிறது விகடன். உங்களின் ஓவியம் ஒன்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடையாகக் கொடுங்கள்’ என விகடன் வேண்டுகோள் வைக்க, சர்வதேச புகழ் பெற்ற முன்னணி ஓவியர்கள் தொடங்கி, ஓவியக் கல்லூரி மாணவர்கள் வரை, ஓவியங்களை உற்சாகமாக வழங்கினார்கள். மொத்தம் 275 ஓவியர்கள், 357 ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள். சென்னை, லலித்கலா அகாடமி நெகிழ்ச்சியால் நிறைந்திருந்தது மார்ச் 5 அன்று. ஆளுநர் ரோசையா கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். ''தமிழ்ச் சமூகம் எப்போதெல்லாம் பெரும் இடர்களை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் மக்களோடு கைகோத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் உறுதியாக இருக்கிறது விகடன். 2003-ல் வானம் பொய்த்து, தமிழகம் பெரும் வறட்சியைச் சந்தித்த. . .