கனவுகளைத் திணிக்காதீர்கள்..!
''இன்றைய மீடியா, குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிகள் என்கிற பெயரில், நம் குழந்தைகளிடமிருந்து அவர்களின் குழந்தைத் தன்மையைப் பறிக்கிறார்கள், காயப்படுத்துகிறார்கள். சொல்லப் போனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அவர்களுக்கும் பங்கு உண்டு!'' - கோபமும், நியாயமுமாகப் பேசுகிறார், இந்தியக் குழந்தைகள் நல சங்கத்தின் கௌரவ இணைச்செயலாளர் கிரிஜா குமார். பாட்டு, நடனம் என்று குழந்தைகளுக்காக சேனல்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள் குறித்த விமர்சனங்கள் பெருகி வரும் சூழலில், அதுகுறித்த விவாதத்தை இங்கு முன்னெடுத்த கிரிஜா குமார், ''குழந்தைகள் வளர வளர, அவர்களுக்குள் தங்களைப் பற்றிய ஒரு பாஸிட்டிவ் சுயபிம்பமும் சேர்ந்தே வளரும். 'கேரம் போர்ட் கேமில் நான் கில்லி’, 'எனக்கு மேத்ஸில் அதிக ஆர்வமுண்டு’, 'ஓட்டப்பந்தயத்தில் நான்தான் எப்போதும் ஃபர்ஸ்ட்’ என்று தன் மீது ஒரு குழந்தை கொண்டிருக்கும். . .