விரல் சூப்புவதை விடுவது எப்படி?
ராஜேந்திரன், திருச்சி. என் மகனுக்கு இரண்டு வயது ஆகிறது. பற்கள் முளைக்கும் இந்த வயதில், அவனிடம் இருக்கும் விரல் சூப்பும் பழக்கத்தை நினைத்துப் பயமாக இருக்கிறது. எத்தனை முறை சொல்லிப் பார்த்தும் அந்தப் பழக்கத்தை அவனால் நிறுத்த முடியவில்லை. இதனால், அவனுடைய பற்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுமோ என்று கவலையாக இருக்கிறது. இந்தப் பழக்கத்தை நிறுத்த வழி இருக்கிறதா? ஜானகிராம், பல் மருத்துவர், சென்னை. குழந்தைகள் விரல் சூப்புவதால், எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என்று நீங்கள் நினைப்பது உண்மைதான். ஆனால், நீங்கள் பயப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்னை இல்லை. குழந்தை தொடர்ந்து 5 வயதுக்கு மேலும் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால்தான், விரல் வைத்துக்கொண்டு இருக்கும் தாடைப் பகுதியில் காய்ப்பு காய்த்ததுபோல் ஆகி, நிரந்தரப் பற்கள் முளைத்து வெளியில் வருவது கடினமாகும். பற்கள் முளைத்தாலும் முன்னால் இருக்கும் நான்கு பற்கள் தூக்கினாற்போல் ஆகிவிடும். இன்றைய நவீன மருத்துவ உலகில் இதுபோன்ற பாதிப்புகளைக். . .