முதல் வணக்கம் முதல்வனுக்கே!
உலக முணர்ந்திடு கருணை யதனொடு நெஞ் சக மதில் நீடுவகை எய்தி அலகில் புகழுறு கவிகை நிழலதின் மெய் யன்பர்குல மதனைக் காக்க குலவும் உபநிடத அரியணை மீது பரசெழிற் செங்கோல் கைக் கொண் டாங்(கு) இலகு மிடை மருதாண்ட விநாயகனை எப்பொழுதும் இறைஞ்சிவாழ்வாம். - மருதவன புராணம் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பொருள்: உலக மக்கள் எல்லாம் உணர்ந்து மனதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்ள... அளவில்லாத கருணை எனும் குடை நிழலில், உண்மையான அடியார் கூட்டத்தைக் காப்பதற்கு உபநிஷதம் எனும் சிம்மாசனத்தில் அமர்ந்து, பரசு எனும் செங்கோலை கையில் ஏந்தி அருள்பாலிக்கும் திருவிடைமருதூர் ஆண்ட விநாயகரைத் துதித்து வாழ்வோம். ஒரு காலத்தில் உரோமசர் எனும் முனிவர், தன் சீடர்களுடன், பல திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் திருவிடைமருதூருக்கும். . .