பாலபிஷேகம் செய்தால்... வியாபாரம் பெருகும்!
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து, ஸ்ரீமீனாட்சி அம்மனின் தெற்கு கோபுர வாயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது நேதாஜி ரோடு. அந்தக் காலத்தில் இந்தச் சாலை திண்டுக்கல் ரோடு என அழைக்கப்பட்டது. ஆகவே இங்கேயுள்ள முருகப்பெருமானும் திண்டுக்கல் முருகன் என்றே போற்றப்படுகிறார்! இந்தக் கோயிலில் உள்ள மூலவரின் திருநாமம் - ஸ்ரீதண்டாயுதபாணி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஸ்ரீசொக்கேசரை வழிபட இந்த வழியே வரும் போது, முருகக் கடவுளையும் தரிசித்ததால்... இந்த ஆலயத்தை சுந்தரர் மடம் என்றும் அழைக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை, தைப்பூச நன்னாளில், இங்கேயுள்ள ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை, பழநிக்கு எடுத்துச் சென்று திரும்பும் வழக்கம் இருந்ததாம். இதனால் இதனை ஸ்ரீபழநியாண்டவர் கோயில் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். மதுரையம்பதியில் உள்ள கோயில்களில், முதல் பட்டா வழங்கப்பட்டது இந்த ஆலயத்துக்குதான் எனும் பெருமையும் உள்ள தலம் இது! மூலவர் ஸ்ரீதண்டாயுதபாணி, வடக்குப் பார்த்தபடி, கையில் தண்டாயுதமும் வேலும் சேவற்கோடியும் தாங்கியபடி காட்சி தரும். . .