வாரிவிட்ட வாட்ச்! எப்போதுமே ரயில் புறப்பட ஐந்து நிமிடங்கள் இருக்கும்போதுதான் ஸ்டேஷனுக்கு செல்வாள் என் அக்கா. ''ரயில்வே டைமும் என் வாட்ச் டைமும் ஒண்ணு. எப்பவுமே சரியா இருக்கும்... மிஸ் ஆகாது'' என்று விளக்கமும் சொல்வாள். அன்றும் அப்படியே மதுரை ரயில் நிலையத்துக்குச் சென்றவள், பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறி அமர்ந்துவிட்டாள். சில நிமிடங்களில் வந்த ஒருவர், அவள் உட்கார்ந்திருப்பது தன்னுடைய இடத்தில் என்று கூறியிருக்கிறார். இவள் மறுக்க, ''மேடம்... தயவு செய்து சார்ட் பாருங்க. என் பெயர்தான் இருக்கு'' என்றிருக்கிறார். அதற்கு இவள், ''நான் ஏன் சார்ட் பார்க்கணும். ஒரு மாசம் முன்னாடியே ரிசர்வ் செய்த கன்ஃபார்ம்டு டிக்கெட் எங்கிட்ட இருக்கு'' என்று சொல்லி டிக்கெட்டை காட்டியிருக்கிறாள். ''நீங்க முதல்ல டிக்கெட்டைப் பாருங்க. உங்க. . .