''வாரம் ஒரு நாள் மெளன விரதம்!''
''கல்லூரிக் காலத்தில் இருந்தே காந்தியம் தொடர்பாகப் படிக்க ஆரம்பித்தேன். காந்தியடிகள் எழுதிய 'உணவு’ மற்றும் 'புலனடக்கம்’ என்கிற இரு புத்தகங்கள்தான் என் ஆரோக்கியத்தின் ஆரம்ப வழிகாட்டி!'' - புத்தம் புது தேயிலை மணக்கும் தேநீர்க் கோப்பையுடன் உபசரித்தபடியே, தனது ஆரோக்கிய ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார் தமிழருவி மணியன். 40 வருடங்களில் 5,000 மேடைகள் கண்ட அருவித் தமிழர். ''சர்க்கரையும் பாலும் கலக்காத வரை தேநீரும் ஒரு மூலிகைச் சாறுதான். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு குவளை தேநீர் குடிக்கிறேன். இதைத் தவிர வெற்றிலைப் பாக்கு, லாகிரி வஸ்துகள் என வேறு எதையும் இது வரை நான் தொட்டது இல்லை. அதனால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் என்னை நெருங்கியதும் இல்லை. கல்லூரிக் காலங்களில் இருந்த அதே குரல். . .