கான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா?
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே கண்ணுக்கு லென்ஸ் அணிந்து வந்த நிலை மாறி, இன்றைய நவீன உலகில் 'கான்டக்ட் லென்ஸ்’ ஓர் அழகுச் சாதனமாக மாறிவிட்டது! சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், கல்லூரிப் பெண்கள் என கான்டக்ட் லென்ஸ் மோகம் கொடி கட்டிப் பறக்கிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த கான்டக்ட் லென்ஸ்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது நல்லது. 'ராஜன் ஐ கேர்’ மருத்துவமனையின் கண் மருத்துவச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜாதா மோகனிடம் பேசினோம்... ''மிக மெல்லிய பிளாஸ்டிக் பாலிமரால் செய்யப்பட்ட கான்டக்ட் லென்ஸ், கண் விழிகளுக்குள் பொருத்தக்கூடியது. கான்டக்ட் லென்ஸில் மிக நுண்ணிய துளைகள் இருக்கும். இவற்றின் வழியாக கருவிழிக்கு ஆக்சிஜன் போகும். கான்டக்ட் லென்ஸ்களில் இப்போது புதிய வரவாக 'காஸ்மெட்டிக் லென்ஸ்’, 'மல்ட்டி கலர். . .