மறந்து போன மருத்துவ உணவுகள்
உணவுக் கலப்படம், செயற்கை வண்ணம்.... என தற்போது நாம் சமைத்துச் சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலானவை உடலுக்குத் தீங்கைத்தான் விளைவிக்கின்றன. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சில 'மறந்துபோன மருத்துவ உணவு’ வகைகள் இங்கே.... பிரண்டைத் துவையல் தேவையானவை: முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும். மருத்துவப் பயன்: குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். வெந்தயக் கீரை தோசை தேவையானவை: தோசை மாவு - அரை. . .