மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகமாகப் பசி எடுக்கிறதே... அது எதனால்? மகிழ்ச்சிக்கும் பசிக்கும் என்ன சம்பந்தம்? சோகமாக இருக்கும்போது சாப்பிடுகிற எண்ணமே இல்லாத அளவுக்கு பசி மங்கிவிடுவது ஏன்? அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால், உடனே சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதே... அது எதனால்? இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். மாநிலங்களை மாநில அரசும் மொத்த மாநிலங்கள் அடங்கிய தேசத்தை மத்திய அரசும் நிர்வாகம் செய்கின்றன. மத்திய - மாநில அரசுகளின் இணைப்புப் பாலமாக ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் செயல்படுகின்றனர். இதைப் போலதான் எனக்கும் மூளைக்குமான செயல்பாடுகளும் நடக்கின்றன. மத்திய அரசு - மூளை மாநில அரசு - வயிறாகிய நான் இணைக்கும் எம்.பி-க்கள் - தானியங்கி நரம்பு மண்டலம் தானியங்கி நரம்பு மண்டலத்தில். . .