மற்றவர்கள் உரிமையில் தலையிடாத பண்பாளர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் நந்தன வருடம் பிறக்கிறது. சோம்பல் நீங்கும். உள்ளமும் உடலும் மலர்ச்சியாகும். கடந்த வருட பிரச்னைகளுக்கு இந்த வருடத்தில் நல்ல தீர்வுகள் உண்டு! தம்பதிக்கு இடையே பாசப்பிணைப்பு அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்கள் செயலில் கவனம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல மணப்பெண் வாய்ப்பாள். எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டுவார்கள். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். 23.6.12 முதல் 14.8.2012 வரை செவ்வாய் 8-ல் அமர்ந் திருப்பதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை வரக்கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.. . .