கும்பகோணம் - தஞ்சை சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத ஸ்ரீஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆலயம். அடியவர்களுக்குத் தேவையான அருட்செல்வத்தையும் பொருட் செல்வத்தையும் ஸ்ரீநிதியாம்பிகை வாரி வழங்க, பக்தர்களின் தொழில் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு தரும் ஈஸ்வரனாக அருள்கிறார் ஸ்ரீவிஸ்வநாதர். 'புராதனமானதும் புராணச் சிறப்புகள் நிறைந்ததுமான இந்தத் திருக்கோயில், தூமகேது முனிவரால் வழிபடப்பட்டது’ எனப் போற்றுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள். அதுமட்டுமா? கும்பகோணத்தைச் சுற்றியுள்ள வணிகப் பெருமக்கள், விசேஷ தினங்களில் இந்தக் கோயிலில் குழுமிவிடுகிறார்கள். குறிப்பாக, அமாவாசை முதலான புண்ணிய தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்வாமி- அம்பாளை வழிபட்டு, பிள்ளையார் சுழி போட்டுத் தங்களின் புதுக்கணக்கைத் தொடங்கினால் அந்த வருடம் அமோக லாபம்தான் என்பது அவர்களின் நம்பிக்கை! சுமங்கலிகளும் கன்னிப். . .