ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 'ஐயே.. பேபி பிரஷ்ஷா?’ அன்று என் மகன் கையால் பல் துலக்கிக் கொண்டிருந்தான். ''ஏம்ப்பா கையால துலக்குற... பிரஷ் என்னாச்சு?'' என்று கேட்டதற்கு, ''தொலைஞ்சுடுச்சும்மா'' என்றான். உடனே, ''குட்டிக்கு, பேபி பிரஷ் வாங்கிக் கொடுத்துருங்க'' என்றேன் கணவரிடம். பாத்ரூமில் இருந்து வேகமாக வந்த என் குட்டி, ''ச்சீ சீ... நான் பேபி பிரஷ்ல துலக்க மாட்டேன். நான் எதுக்கு பேபி யூஸ் பண்ணின பிரஷை யூஸ் பண்ணணும்?'' என்றான் கோபமாக. பக்கத்து வீட்டுப் பாப்பாவின் பெயர் பேபி என்பதுதான், குட்டி சாரின் கோபத்துக்குக் காரணம். அவனின் கோபம் கலந்த அழுகை, காலை டென்ஷனிலும் வீட்டைச் சிரிப்பால் நனைத்தது! - எஸ்.லோகநாயகி, அவ்வையார்பாளையம் கௌபாய்... டாக்பாய்! ஒருநாள் என் மகள், தன் தாத்தாவுடன். . .