# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count3
save
print A+     A-
குதிரை இருக்கும்... வண்டி இருக்காது!

இது பழநி சோகம்

நேகமாகத் தமிழகத்தில் இன்னமும் 'டொக் டொக்’ என்று குதிரை வண்டிகள் தட தடக்கும் இடம்... பழநியாகத்தான் இருக்கும்! இங்கு மொத்தம் 150 குதிரை வண்டிகள் இன்றும் சவாரி செல்வதற்குத் தயாராக இருக்கின்றன. அருகிவரும் குதிரை வண்டித் தொழிலோடு, அது தொடர்பான பிற தொழில்களும் அழிந்து கொண்டு இருக்கின்றன. பழநியில் தற்போது உள்ள குதிரை வண்டிகளைப் பழுதுபார்க்க இங்கு இரண்டே இரண்டு பட்டறைகள்தான் இருக்கின்றன. முனியாண்டி, அழகர் இருவரும்தான் அந்தப் பட்டறைகளை நடத்துகின்றனர். முனியாண்டி பேசும்போது, 'எனக்கு 62 வயசு ஆகுது. 30 வருஷமாத் தொழில்ல இருக்கேன். நான் வண்டி ஓட்டுனப்ப பழநியில ஆறேழு இடத்துல பட்டறை இருந்துச்சு. அப்ப எல்லாம் ஒவ்வொரு ஊர்லயும் 500 வண்டிகளுக்கு மேல இருக்கும். ஒரு வண்டி செய்ய, ஒரு மாசம் வரை ஆகும். குறைஞ்சது 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். வண்டி செய்ய  வாகை, கருவேலம் மரங்களை மட்டும்தான் பயன்படுத்துவோம். அந்த ரெண்டு மரங்களும்தான் எவ்வளவு வெயிலையும் மழையையும் தாக்குப்பிடிக்கும்!

 

சவாரி வண்டி, ஈரோடு வண்டி, மதுரை வண்டினு குதிரை வண்டிகளில் மூணு வகை இருக்கு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வடிவத்துல இருக்கும். தென் தமிழ்நாட்டுல மதுரை வண்டிகள்தான் நிறைய ஓடும். ஈரோடு வண்டிகள் கோயம்புத்தூர் ஏரியாவில் நிறைய இருக்கும். சவாரி வண்டிகளை குதிரைகளைப் பழக்கப் பயன்படுத்துவாங்க.

எனக்கு அப்புறம் இந்தத் தொழிலைக் கத்துக்க யாருமே முன்வரலை. என் பசங்ககூட மோட்டார் லைன்ல போயிட்டாங்க. குதிரை வண்டிகளே அழிஞ்சுட்டு இருக்கிறப்போ, அதை ரிப்பேர் பார்க்கிற தொழிலைக் கத்துக்க யாருதான் முன்வருவாங்க. எங்க ரெண்டு பேருக்கு அப்புறம் இந்தத் தொழில் செய்ய ஆளே கிடையாது!'' என்று கவலைக் குரலில் முடித்தார் முனியாண்டி.

பழுதுபார்க்கும் தொழிலைப் போலவே குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் தொழிலும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. லாடம் அடிக்கும் நாகராஜன் கூறும்போது, ''நான் 20 வருஷமா லாடம் அடிக்கிறேன். குதிரைக்கு சுளுவா லாடம் அடிச்சிட முடியாது. மாட்டைப் படுக்கவெச்சு லாடம் அடிப்பாங்க. ஆனா, குதிரையை நிக்கவெச்சே அடிச்சிடலாம். அப்போ முரட்டுக் குதிரைங்க திடீர் திடீர்னு எத்தும்.  அது போக்குலயே போய் வேலையை முடிக்கணும். இதுவரை இந்தத் தொழிலைக் கத்துக்கணும்னு யாரும் வந்தது இல்லை. கண்டிப்பா இனிமேலும் யாரும் வரமாட்டாங்க. ஏதோ குதிரை வண்டிங்கள்லாம் இருக்கிற வரை இந்தத் தொழிலைப் பார்ப்பேன். அப்புறம் கிடைக்கிற வேலைகளைப் பார்த்துப் பொழப்பை  ஓட்ட வேண்டியதுதான்!'' என்கிறார் வருத்த மாக!

உ.அருண்குமார், படங்கள்: வீ.சிவக்குமார்


[ Top ]
Loganathan1 Years ago
பெட்ரோல் விலைய பார்த்தா பேசாம குதிரை வண்டியெல போகலாம்...!!
s1 Years ago
I used to travel in this one. My Grandpa used this one to come to see me in school. Olden days...
Ramanathan1 Years ago
நான் சிறுவனாக இருந்த போது மதுரையில் குதிரை வண்டியில் பள்ளிக்கு செல்வேன். அது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம். தினமும் காலையில் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்தாலும், குதிரை வண்டியை பார்த்தவுடன், அழுகை மறந்து குதூகலம் பெருகும். குதிரை வண்டிக்காரரை சண்முகய்யா அல்லது அய்யா என்று அழைப்போம். அவர் குதிரைக்கு ஏதோ காரணத்தால் தக்காளி என்று பெயரிட்டிருந்தார்!! ஒரு மாதத்திற்கு ஒரு பிள்ளைக்கு 2 ரூபாய் வாங்கியதாக ஞாபகம். ஒவ்வொரு பிள்ளையையும் தான் பெற்ற பிள்ளையை பத்திரப் படுத்தி அழைத்துச் செல்வதைப்போல் எங்களை பாசத்தோடு அழைத்துச் செல்வார். எனக்கு ஒரு முறை காய்ச்சல் வந்த போது தொடர்ந்து தினமும் வீட்டிற்கு வந்து ஏதோ கசப்பான ஒரு இலையை கொடுத்துவிட்டுச் சென்றார் (ஆடாதொடையோ கற்பூரவல்லியோ?). எந்த சுய நலமும் இல்லாமல் எஙகள் மீது அன்பு செலுத்தினார்.

வண்டியை மெதுவாக அலுங்காமல் ஓட்டிச் செல்வார். அவர் வண்டியில் செல்லும் போது அப்படி ஒரு இதமும் ஆனந்தமும் இருக்கும். இப்போது செல்லும் ஏசி ஹூண்டாய் செடான் கூட அந்த ஆனந்தத்தை தருவதில்லை.
இதை எழுதி முடிப்பதற்குள் இரண்டு முறை கண்ணீர் கசிந்துவிட்டது.
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
28-மார்ச் -2012
சென்ற இதழ்
21-மார்ச் -2012

*Flip Version not supported in Devices