வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா?
'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்!’ என்ற பழமொழியுடன் இப்போது, 'இடத்தை வாங்கிப்பார்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் போல. அந்தளவுக்கு ரியல் எஸ்டேட் ஏரியாவில் நிரம்பிக் கிடக்கின்றன புதைகுழிகள். அதில் சிக்கிக் கொண்டுவிட்டால், மீள்வதென்பது அத்தனை சுலபமல்ல! இங்கே அப்படி சிக்கிக் கொண்டு ஒருவழியாக மீண்டுவிட்ட கோயம்புத்தூர், காரமடையைச் சேர்ந்த ஆறுச்சாமி - பத்மாவதி தம்பதி, அதையடுத்து கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தேடி, அழகான இடத்தை விலைக்கு வாங்கி வீட்டைக் கட்டி, தற்போது சந்தோஷமாக குடியேறியிருக்கின்றனர். புதிதாக வீட்டுமனை வாங்கிப் போட நினைப்பவர்களுக்கு, இந்தத் தம்பதியின் அனுபவம்... அருமையானதொரு பாடம்! ''சொந்த வீடு கட்டியே தீரணும்ங்கிற வைராக்கியத்தோட எங்க சேமிப்புக்குத் தோதான விலையில இடம் தேடினோம். கோவையிலிருந்து 30 கி.மீ. தள்ளி, ரியல் எஸ்டேட்காரங்ககிட்டப் போனோம். அவுங்க. . .