பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர் கிராமத்து வாசகி ஒருவர் தொலைபேசினார் எனக்கு. 13.3.2012 தேதியிட்ட இதழின் 'Money... Money... Money ’ தொடரில், தங்கத்தில் முதலீடு செய்வதைப் பற்றி எழுதியிருந்த சேப்டர் குறித்துப் பேசியவர், 'நாங்க தங்கத்தில் முதலீடு செய்ய தங்க காயின்களாத்தான் வாங்கி வெச்சுருக்கோம். ஆனா, அதை விற்கும்போதோ... நகையா மாற்றும்போதோ சேதாரம், செய்கூலினு ஏகப்பட்ட பணம் போயிடுது. நீங்க எழுதின பேப்பர் தங்கத்தைப் பத்திப் படிச்சோம். எங்க கிராமத்துல பல பெண்கள் பேப்பர் தங்கத்துல முதலீடு செய்ய இருக்கோம். இன்னும் விவரமா அதைப் பத்திச் சொல்லுங்களேன்!’ என அன்பான வேண்டுகோள் விடுத்தார். நகரத்தில் உள்ள பெண்களுக்கே 'பேப்பர் கோல்டு’ போன்ற வார்த்தைகள் எல்லாம் அந்நியமாக இருக்க, அழைத்த அந்த கிராமத்து வாசகியும் அவர் தோழிகளும். . .