இந்தியர்களைப் போல ஜனநாயகத்தைக் கொண்டாடுபவர்கள் யாரும் இல்லை. தஞ்சாவூர் போவதற்காக எக்மோரில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பிடிக்கப் போனேன். 4 மணி வண்டிக்கு 3 மணிக்கே போய், டிக்கெட் எடுத்துக்கொண்டு போனால், அன்ரிசர்வ்டு பெட்டிகள் முழுக்கக் கும்மியடிக்குது கூட்டம். நிற்பதற்கே இடம் இல்லை. எங்கெங்கும் மனிதர்கள். ஏதேதோ லக்கேஜ்கள். நடுவே ஒரு வெங்காயக் கூடை. குழந்தையைப் போட்டு சீட் பிடித்ததில், இரண்டு அம்மணிகளுக்கு நடுவே ஆக்ஷன் ப்ளாக். சீட்டில் நெருக்கியடிப்பது போக, தரை எங்கும் நியூஸ் பேப்பர் விரித்து ஜனத்திரள். நாலைந்து பேர் ஒரே நேரத்தில் மொபைல் எஃப்.எம்மில் பாட்டுகள் போட்டு ரகளை பண்ணுகிறார்கள். ஆரஞ்சை உரித்து அசால்ட்டாகப் பெட்டி எங்கும் வீசுகிறார்கள். டாய்லெட் கதவை ஒட்டி உட்கார்ந்தபடி ஒருவர் வெஜிடபிள் பிரியாணி சாப்பிடு கிறார். ஒருவர் பைக்குள். . .