நானே கேள்வி... நானே பதில்!
'' 'அம்மா’வைப் பற்றிய சமீபத்திய சுவாரஸ்யமான செய்தி ஏதாவது?'' ''நீங்கள் கேட்கும் 'அம்மா’வைப் பற்றி என்னிடம் எந்தச் செய்தியும் இல்லை. ஆனால், அம்மாவைப் பற்றி சமீபத்தில் படித்தது இது: 'ஆண்களைக் குறையே சொல்லாத ஒரே பெண்; அவர்களுடைய அம்மா மட்டும்தான்!’ '' - சாய்மீரா, சென்னை-91. ''தமிழகத்தில் வளரும் தலைமுறை மீது ஆட்சி யாளர்களுக்கு எந்த அளவில் அக்கறை இருக்கிறது?'' ''கீழே உள்ள புள்ளிவிவரங்களே உங்களுக்கான பதில்: தமிழகத்தில் உள்ள மாவட்ட நூலகங்களின் எண்ணிக்கை 32, கிளை நூலகங்கள், ஊரக நூலகங்கள் என்று எல்லாவற்றையும் சேர்த்தால், மொத்த நூலகங்கள் 4,027. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6,936.'' - சு.கவிபாலா, புதுக்கோட்டை. ''கொடூரமாகப் பழிவாங்கும் பேய்ப் படங்களைப் பார்க்கும்போது என்ன தோன்றும்?'' '' 'இப்படிக் கொல்லப்பட்டவர்களும். . .
உலக பிரச்சனை தீர்க்க வர மாட்டார்களா?