''இன்றைய நாகரிக உலகின் குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் அங்கிளாகவும், பெண்கள் அனைவரையும் ஆன்ட்டியாகவுமே அறிகிறார் கள். சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி என்ற உறவுகள் எல்லாம் தெரியாம லேயே வளர்கிறார்கள். பணத் தையே பிரதானமாக நினைக்கும் அவர்களின் 21-ம் நூற்றாண்டுப் பெற்றோருக்குப் புரியவில்லை... உறவுகளை சேமிப்பதே அவர்களை நல்ல மனிதர்களாக வளர்க்கும் என்பது!'' - அக்கறையும், வேதனையும் கலந்திருந்தன மனநல மருத்துவர் கீதாஞ்சலியின் வார்த்தைகளில். ''கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, அனைவரும் அவ ரவர்களின் வேர்களில் இருந்து பிரிந்து தீவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அன்பையும், அவசியத்தையும் தடுக்கிறது நாம் சேர்த்து வைத்திருக்கும் பணம். விளைவு, 'அவங்க இல்லாம நான் வாழ முடியாதா..? எனக்கு யாரும் தேவைஇல்லை’ என்கிற தப்பான நம்பிக்கையை வளர்க்கிறார்கள். இன்னொரு பக்கம், சுழற்றி அடிக்கும். . .