மருத்துவப் பட்டம் பெற்றுவிட்டபோதும், நம்முடைய புராண இதிகாசங்களை அலசி ஆராய்ந்து கட்டுரைகள் எழுதுவதோடு, சொற்பொழிவுகளும் ஆற்றி வருபவர் டாக்டர். தேவ்தத் பட்நாய்க். ஃபன்டலூன், பிக் பஸார் நிறுவனங்களை நடத்தும் ஃப்யூச்சர் குரூப்பில், முதன்மை நம்பிக்கை அதிகாரி. அதாவது, சீஃப் பிலீஃப் ஆபீசர். தலைமையியல் தகுதிக்கான பயிற்சியை ஊழியர்களுக்கு அளித்து வருபவர். இதிகாச பாத்திரங்கள் மற்றும் மகாபாரதம் குறித்த சுமார் இருபது நூல்களின் ஆசிரியர். இவை உலகம் முழுக்கப் பரபரப்பாக விற்பனை ஆகின்றன. நவீன நிர்வாக இயலில் சிக்கல்களை விடுவிக்கும் சிந்தனைகளைத் தம் சொற்பொழிவுகளாலும், கட்டுரைகளாலும் பரப்பி வருபவர் தேவ்தத் பட்நாயக். 'விணீஸீணீரீமீனீமீஸீt விஹ்tலீஷீsமீ’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள், இங்கே தமிழில் இதழ்தோறும் உங்களுக்காக... அவர், ஏழைப் பூசாரி. கடுமையான வறுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஒருநாள். . .