'அட! இங்கதாம்ப்பா என் பெட்டியை வெச்சிருந்தேன். இப்ப காணோம். எவனோ தூக்கிட்டுப் போயிட்டான்போல! சரி... பெட்டி போனா என்ன? சாவி எங்கிட்டதானே பத்திரமா இருக்கு!’ - அந்தக் காலத் திரைப்பட வசனம் இது. இதைப் பார்த்தும் கேட்டும் நாம் சிரித்திருப்போம். 'பொட்டியே போயிடுச்சு; சாவியைப் பத்திரமா வெச்சிருக்கானாம் இவன்..! சரியான அறிவுக் கொழுந்துய்யா!’ என்று வசனமும் பேசியிருப்போம். ஆனால்... பெட்டியும் இருந்து, சாவியும் நம்மிடம் இருந்து, ஆனால் அதை மறந்தும் திறந்து பார்க்காத நம்மை நினைத்து வருங்காலத் தலைமுறையினர் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டார்களா? மேக்புக் (Mac Book) ஃபேஸ்புக், இன்டர்நெட், எஸ்.எம்.எஸ்... எனப் பலப் பல வழிகளிலும் விஞ்ஞான வசதியோடு அல்லவா சிரிப்பார்கள்! 'பெட்டியையும் சாவியையும் வெச்சுக்கிட்டே, அதைத் திறந்து பார்க்காத சோம்பேறிங்கய்யா நம்ம ஃபோர்ஃபாதர்ஸ் (முன்னோர்).. . .