பிரம்மதேவன் ஒன்பது விதமான வடிவங்களைக் கொண்டு அன்பர் களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். இந்த நவ பிரம்மர்களின் வடிவங்கள் முறையே 1. குமார பிரம்மன், 2. அர்க்க பிரம்மன், 3. வீர பிரம்மன், 4. பால பிரம்மன், 5. சுவர்க்க பிரம்மன், 6. கருட பிரம்மன், 7. விஸ்வ பிரம்மன், 8. பத்ம பிரம்மன், 9. தாரக பிரம்மன் என்பனவாகும். இந்த ஒன்பது திருவடிவங்களைத் தாங்கி ஒன்பது சிவலிங்கங்களை தனித் தனிக் கோயில்களில் வைத்து பிரம்ம தேவன் வழிபட்ட இடம், ஆந்திரப் பிரதேசம்- மெகபூப் நகர் மாவட்டம், அலம்பூர் ஆகும். இங்கு இந்தக் கோயில்கள் சிறப்புடன் திகழ்கின்றன. மத்திய அரசு தொல்லியியல் துறையினரால் இவை நன்கு பராமரிக்கப்படுகின்றன. தென்னகத்தில் இதுபோன்ற கோயில் செய்திகள் இல்லை என்றாலும், புராணச் செய்திகள் தொகுத்தளிக்கப்படுகின்றன.. . .