வேத நாயகனாக சிவனைப் போற்றுவார்கள் சிவபக்தர்கள். வேதங்கள் சிவனாரால் ஆதியில் அருளப்பட்டன. மரங்களாகவும், மலைகளாகவும் அமைந்து வேதங்கள் வழிபட்ட சிவத்தலங்களும் உண்டு. அங்கெல்லாம் வேதபுரீஸ்வரர் எனும் நாமத்துடன் எழுந்தருள்வார் இறைவன். சிவனாரின் மூச்சுக் காற்றாகவும், பாதுகைகளாகவும் வேதங்கள் திகழ்வதாக விவரிக்கின்றன புராணங்கள். இதுகுறித்த சில தகவல்களை அறிவோம். வேத மலைகள்... நான்கு வேதங்களும் மலைகளாக நின்றிருக்கும் தலம் வேதகிரி எனப்படும் திருக்கழுக்குன்றமாகும். இதன் நான்கு சிகரங்களும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு வேதமலையின் மீதும் ஒவ்வொரு யுகத்தில் பெருமான் வீற்றிருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. இப்போது அதர்வண வேதத்தின் உச்சியில் பெருமான் எழுந்தருளியுள்ளார் என்பர். இந்தத் தலத்துக்கு வேதாசலம் என்றும் பெயர் உண்டு. வேத வனம்... நான்கு வேதங்களும் மனித வடிவில் சிவனைத் துதித்து வழிபட்டதலம் திருமறைக்காடு. மூடப்பட்டிருந்த கோயில் கதவுகள் திறக்க திருநாவுக்கரசர் பதிகம் பாடியருளியது இந்தத் தலத்தில்தான். திருஞான சம்பந்தர், 'சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்...’ என்று பாடி, மீண்டும் கதவுகள். . .