இதிகாசத்திலும் புராணங்களிலும் வாழ்ந்தவர்கள் வழிபட்ட தலங்கள் பல உண்டு என்பார்கள் பெரியோர்கள். அவர்கள் வழிபட்ட தலங்களையும், அங்கே ஸ்தாபித்த இறைத் திருமேனிகளையும் இன்றைக்கும் தரிசித்து வருகிறோம். ஸ்ரீராமர், சீதையைத் தேடி வரும்போது வழிபட்ட தலங்கள் பல உண்டு. சீதையை மீட்ட பிறகு, அவளுடன் சேர்ந்து வணங்கி வழிபட்ட ஆலயங்கள் என்று பல ஸ்தலங்களின் புராணங்கள் விவரிக்கின்றன. அதேபோல் ஸ்ரீஅனுமன் வழிபட்ட தலங்களும், அவர் திருக்கரத்தில் இருந்து விழுந்த மலைகளும் ஏராளம். மகாபாரதத்தில்... பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, வனங்களில் ஆங்காங்கே தங்கியபடி, கடும் தவம் மேற்கொண்டனர் என்றும், அங்கே அந்தத் தலங்களில் அவர்கள் வழிபட்ட இறைத் திருமேனிகளைப் பின்னர் விக்கிரகங்களாக வடித்துப் பிரதிஷ்டை செய்து, மன்னர்கள் வழிபட்டு வந்தார்கள் என்றும் அறிகிறோம். அந்த ஆலயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இன்றளவும்,. . .