நழுவுகிறதா வட்டாட்சியர் அலுவலகம்?
தமிழ்நாட்டிலேயே வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 52 துறைகளுக்கான அலுவலகங்களை ஒரே இடத்தில் கொண்டுவரும் வகையில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு திறப்பு விழா நடத்தப்பட்டது. படிப்படியாக அனைத்துத் துறைகளும் வந்து விட்ட நிலையில், வட்டாட்சியர் அலுவலகமும், வட்ட வழங்கல் அலுவலகமும் சில சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் வராமல் அடம்பிடிக்கின்றன. இது பற்றி 'நுகர்வோர் குரல்’ அமைப்பின் தலைவர் பூபதி, ''பொதுமக்களின் வாழ்வு பெரும்பாலும் வட்டாட்சியர் அலுவலகத்தையே சார்ந்துள்ளது. புதிய ரேஷன் கார்டு வாங்குதல், புதுப்பித்தல், மாற்றுதல், பட்டா, சிட்டா, சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சான்றுகளை வாங்குதல், இறப்பு, வாரிசு சான்றுகள் பெறுதல் என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது தாலுக்கா அலுவலகமும், வட்ட வழங்கல். . .